ஞாயிறு, 12 மே, 2024

நாடு முழுவதும் இந்தியா கூட்டணி அலை" - ராகுல்

 
மின்னம்பலம் -Selvam :  “நாடு முழுவதும் இந்தியா கூட்டணி அலை” – ராகுல்
நாடு முழுவதும் இந்தியா கூட்டணி அலை வீசுகிறது என்று காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (மே 11) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இன்றோடு நான்காம் கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்துள்ளது. மே 13-ஆம் தேதி நான்காம் கட்ட தேர்தல் 96 தொகுதிகளில் நடைபெற உள்ளது.
இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று மகாராஷ்டிரா மாநிலம் நந்துர்பார் தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.



    महाराष्ट्र हो या उत्तर प्रदेश, हरियाणा हो या बिहार, हर तरफ INDIA की आंधी चल रही है।

    मैं फिर कहता हूं – 4 जून के बाद नरेंद्र मोदी प्रधानमंत्री नहीं रहने वाले। https://t.co/5H8pc8fNmA

    — Rahul Gandhi (@RahulGandhi) May 11, 2024

இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த வீடியோவை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்து பிரியங்கா காந்தி வெளியிட்ட பதிவில்,”உற்சாகமாக வரவேற்ற நந்துர்பார் மக்களுக்கு மனமார்ந்த நன்றி. மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தியா கூட்டணி அரசு அமையப்போகிறது என்பது தெளிவாக தெரிகிறது” என்று குறிப்பிட்டார்.

பிரியங்காவின் வீடியோவை மேற்கோள் காட்டி ராகுல் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், “இந்தியா கூட்டணி கட்சிகளின் அலை நாடு முழுவதும் வீசுகிறது. ஜூன் 4-ஆம் தேதிக்கு பிறகு நரேந்திர மோடி பிரதமராக வரமாட்டார் என்பதை மீண்டும் ஒருமுறை சொல்லிக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக