வியாழன், 9 மே, 2024

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து 8 பேர் உயிரிழப்பு

 zeenews.india.com - JAFFER MOHAIDEEN : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் சுதர்சன் என்ற பட்டாசு ஆலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண்கள் உட்பட பலர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், விபத்தில் சிக்கிய 5 பெண்கள், 3 ஆண்கள் என மொத்தம் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில், ஆலையின் 10க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே செங்கமலப்பட்டி அருகே கடந்த திங்கட்கிழமையும் விபத்து ஏற்பட்டது. 2 நாள்கள் இடைவெளியில் தற்போது மீண்டும் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக