வியாழன், 2 மே, 2024

2 ஜி வழக்கு தீர்ப்பை மறு ஆய்வு செய்யவேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது!~

ராதா மனோகர்  :  ஆ ராசா மீதான 2 ஜி  ஸ்பெக்ட்ரம் வழக்கு தீர்ப்பை மறு ஆய்வு செய்யவேண்டும் என்ற ஒன்றிய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது!~
2 ஜி வழக்கும் அதை ஒட்டி நடந்த ஜனநாயக கேலி கூத்துக்களும் ஒரு அசல் மசாலா படத்திற்கே உரிய அளவு கற்பனை வளம் நிறைந்தவை
ஒட்டு மொத்த  அரசும் சங்கிகளும் முன்னின்று நடத்திய நாடகம்
அதற்கு ஒத்து ஊதிய பெரும் பெரும் ஊடகங்களும் ஜனநாயக உலகே வெட்கி தலை குனியவேண்டிய அளவு பித்தலாட்டங்கள் நிறைந்தவை!
இது பற்றி நான் முன்பு எழுதிய ஒரு பதிவை இங்கு மீள் பதிவு செய்கிறேன்
மீள்பதிவு  : October 25, 2020
ஒரு அரசியல்வாதியின் வாழ்க்கையை அவரின் அரசியல் கோணத்தில் இருந்துதான் பார்க்கவேண்டும் என்ற நியதி கிடையாது .
பல  அரசியல்வாதிகளுக்கு அரசியலுக்கு அப்பால் பல கோணங்களும்  உண்டு . அண்ணா  கலைஞர் போன்றவர்கள் கலை  இலக்கியம் நாடகம் சினிமா போன்ற பலதுறைகளில்   பெரும் ஆளுமை உள்ளவர்கள்
எம்ஜியார் கூட ஒரு வெற்றிகரமான நடிகர் என்பதையும் தாண்டி அவர்  ஒரு நல்ல திரைப்பட இயக்குனராகும். '


ஆ ராசா அவர்கள் அரசியல்வாதி நல்ல நிர்வாகி என்பதை எல்லாம் விட அவர் உச்சம் பெற்றது 2 ஜி வழக்கு போரில்தான் .
அது  முழு திராவிட இயக்கத்திற்கும் எதிராக கட்டமைக்கப்பட்ட ஒரு போர்தான்.
அந்த போரின் மையப்புள்ளியாக காலம்   ஆ ராசாவை நிறுத்தி இருந்தது.
அந்த போரில் திராவிட இயக்கமும் திமுகவும் அதன் தலைவர்களும் தொண்டர்களும் அடைந்த விழுப்புண்கள் ஏராளம் .
திருமதி  கனிமொழியையும் குறி வைத்தே தாக்கினார்கள் .. நிச்சயமாக அவரின் ஆளுமையை  இனம் கண்டுதான் அந்த தாக்குதல் அவர் மீது தொடுக்கப்பட்டது.
ஒரு கட்டத்தில் எல்லா அம்புகளும் அத்தனை சக்திகளையும் திரட்டி கொண்டு மூர்க்கத்தனமாக பாய்ந்தது .
இவர்களின்  வேறு எவர் நின்றாலும் கொஞ்சம் ஆடிப்போய்த்தான் இருப்பார்கள் .
அந்த புயல் வரும்போது எல்லோரும் திகைத்து நின்றார்கள் . ஏனெனில் அதன் கனம் அந்தளவு பயங்கரமாக பூதாகரமாக இருந்தது .
அது  வெடித்த கணத்தில் இருந்து அது கரைக்கடந்து போகும்வரை ஒரே மனோ நிலையில்  சளைக்காமல் சலிக்காமல் வீரத்தோடு விவேகத்தோடு சிரிப்போடு அதை ஆ ராசா  எதிர்கொண்ட விதம்  ஒரு காவியம் பாடத்தகுந்த வரலாறு.
இந்த மோசடி வழக்கை ஆ ராசா எதிர்கொண்ட விதம் தோல்வியில் துவண்டு போகும் எவருக்கும் ஒரு பாடமாக இருக்கும் . உத்வேகம் கொடுக்கும் .
எப்பேர்ப்பட்ட உயரத்தில் இருந்த ஆ ராசாவை எங்கே கொண்டுபோய் தள்ளினார்கள் ?
அப்போதும் எனக்கு யாரும் வாதாட தேவை இல்லை நானே வாதாடுகிறேன் .. வாய்தாவும் தேவை இல்லை . என்று தீர்மானித்தார் ராசா!
முழுக்க முழுக்க எதிர்திசையிலேயே நின்ற நீதிமன்றத்தின் மனசாட்சி தவுகளை முட்டி மோதி திறந்தார்
இது போன்ற ஒரு நிகழ்வை  இந்திய நீதிமன்றங்கள் இதற்கு முன்பு வரை  கண்டதில்லை..
ஒரு அரசியல்வாதி ஆ ராசாவை ஒருவேளை எதிர்காலம் கவனிக்காமல் விட்டாலும்
2 ஜி வழக்கு ராசா என்பது  அரசியலையும் தாண்டியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக