வியாழன், 4 ஏப்ரல், 2024

கச்சத்தீவு ஸ்ரீமாவோ - இந்திரா காந்தி - Smiling Buddha -- அணு குண்டு!

ராதா மனோகர் :     கச்சத்தீவு  ஒப்பந்தம் பற்றிய புரிந்துணர்வுக்கு  சில விடயங்களை ஆழமாக ஆய்ந்து பார்ப்பது அவசியம்.

குறிப்பாக தெற்கு ஆசியாவில் இலங்கையின் வகிபாகம் பற்றிய வரலாறு பற்றிய ஆய்வும் முக்கியமான தொன்றாகும்!
இலங்கை ஒரு சிறிய நாடக இருந்தாலும் அது பூகோள முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது.
அதன் பழைய வரலாறும் சரி அண்மைக்கால வரலாறும் சரி நுட்பமாக கவனிக்க தக்கது
குறிப்பாக  தெற்காசிய பிராந்தியத்தின் முக்கியமான ஒரு தளமாக காலனித்துவ காலங்களிலும் சரி இன்றும் சரி இலங்கை விளங்குகிறது.
இந்த கோணத்தில் சில விடயங்களை பாப்போம்!   
இந்துமாக்கடல் பகுதியை  அணு ஆயுதங்கள் அற்ற ஒரு பகுதியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை சுதந்திரம் அடைந்த காலங்களில் இருந்தே வலியுறுத்தி வந்துள்ளது.
 May 1954 இல் தெற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாடு கொழும்பில் நடந்தது
அந்த மாநாட்டில் இலங்கை பிரதமர் சேர் ஜான் கொத்தலாவலை *Sri Lanka’s Prime Minister Sir John Kotelawala)  அவர்கள் இது பற்றி கூறுகையில்:
உலகில் பெரும் நாசத்தை விளைவிக்க கூடிய அணு ஆயுத போட்டி பற்றி ஊடகங்களை இருட்டடிப்புக்களையும் தாண்டி சில கவலைக்குரிய செய்திகளை அறிகிறோம்.
உலக மக்களின் கரிசனையை மனதில் கொண்டு அமெரிக்கா ரஷியா பிரித்தானிய போன்ற நாடுகள் இது பற்றிய செய்திகளை வெளிப்படையாக கூறவேண்டும் என்று வலியுறுத்தினார்
1958 ஆம் ஆண்டு ஐநாவில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட அமைச்சர் டி பி சுபாசிங்கா இது பற்றி ஐநாவில் பேசும்பொழுது  : “For all countries, whether large or small, has a right to protest against policies which endangered their very existence” 



சிறிய நாடுகளாக இருந்தாலும் பெரிய நாடுகளாக இருந்தாலும் தங்களின் இருப்புக்கு சவாலாக  இருக்க கூடிய திட்டங்களை எதிர்க்கும் உரிமை உண்டு என்று குறிப்பிட்டார்.



 1960 ஆம் ஆண்டு ஐநாவில் இலங்கை  இலங்கை பிரதிநிதியாக கலந்து கொண்ட  சேர்  கிளவுட் கொரியா பேசும்பொழுது : வீடு முழுவதுமாக பற்றி எரியும் வரை அதை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல்  இருக்க கூடாது.
 மழையில் வீடு முற்றாக ஒழுகும் வரையில் அதை திருத்தாமல்  இருக்கமுடியாது என்றும் குறிப்பிட்டார்
(Let us not wait until the house has burnt down to become interested in inadequate fire protection. In our country, we have an old saying which might well take to heart. It runs like this: “Don’t repair the leaks in your roof when it begins to rain.” I think that there is a good lesson in that saying )

1961 செப்டம்பர் மாதம்  இலங்கை சார்பாக ஐநாவில் கலந்து கொண்ட அமைச்சர் திரு பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க அவர்கள் அங்கு கூறும்பொழுது :
இலங்கை  அணு ஆயுதங்களை முற்றாக தடை செய்வதையே விரும்புகிறது . இந்த உலக ஆணு ஆயுதங்கள் அற்ற ஒரு உலகாகவே நாங்கள் பார்க்க விரும்புகிறோம்.
ஆயுத குறைப்பு தொடர்பான விவாதங்களில் பெரிய நாடுகளோடு அணி சேரா நாடுகளும் இணைந்து கருத்துக்களை பரிமாறவேண்டும்
குறிப்பாக அணி சேரா நாடுகள்  அணு ஆயுதங்கள் பற்றிய தங்களின் கருத்துக்களை பெரிய நாடுகளின் முன்பாக வைக்கவேண்டும்.

 

October 1962 இல்  அமெரிக்காவின் அணு சோதனையை குறித்து  ஜனாதிபதி ஜான் எப் கென்னடிக்கு இலங்கை பிரதமர் ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்க ஒரு கடிதம் எழுதினார்
அதில் அணு  ஆயுதங்களை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வேண்டிய பொறி முறையை உருவாக்குவது அவசியம் என்று குறிப்பிட்டிருந்தது
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி ஜான் எப் கென்னடி தங்களின் கோரிக்கையை கொள்கை அடிப்படையில் நான் ஏற்று கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்

 Sri Lanka’s Prime Minister Sirimavo Bandaranaike  had conveyed a message to President John F. Kennedy expressing her view on the explosion conducted by the United States at that time.
In that message, she highlighted the need for establishing the inspection and control mechanisms for nuclear weapons.
President Kennedy, in his reply to her message, responded that he principally agrees to Bandaranaike’s idea.


In 1963 இல் பகுதி அணு ஆயுத சோதனை ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திட்டது
 Sri Lanka decided to sign the Partial Test Ban Treaty (PTBT) concerning the ban of nuclear weapons tests in the atmosphere, in outer space and also underwater..

தொடர்ந்து  இந்துமாக்கடல் பகுதியை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக அறிவிக்கும் முயற்சியாக
1961 இல் பெல்கிரேட்டில் ( யூகோஸ்லாவியா) நடந்த அணி சேரா  நாடுகளின் மாநாட்டிலும்,
பின்பு 1964 இல் கெய்ரோவில் (எகிப்து)  நடந்த அணி சேரா நாடுகளின்  மாநாட்டிலும் இந்த முன்மொழிவை வலியுறுத்தினார்.

இந்த அடிப்படையில் மூன்று முக்கிய திட்டங்களை இலங்கை பிரதமர் ஸ்ரீ மாவோ அம்மையார்  முன்மொழிந்தார்

அணு ஆயுதங்கள் அற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் உள்ள  நிலத்திலும் கடலிலும்
அணு ஆயுதங்கள் ஒழிக்கப்படும்    
 The concept of nuclear-free zones should be extended to cover the areas and oceans that have hitherto been free of nuclear weapons.

அணி சேரா நாடுகளின் அங்கத்துவ நாடுகள் தங்களின் துறைமுகங்கள் விமான நிலையங்கள் போன்றவற்றை அணு ஆயுத கப்பல்களுக்கும் அணு ஆயுதங்களை காவும் விமானங்களுக்கும் மற்றும் வேறு எந்த வழியிலும் அவற்றை கொண்டு செல்லும் வழியை மூடவேண்டும்
    All non-aligned nations should take immediate action to close their ports and airfield to ships and aircrafts carrying nuclear weapons, or which are equipped to carry nuclear weapons.

காலனித்துவ நாடுகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தளங்களை மூடவேண்டும் . மேலும் புதிதாக ஆக்கிரமிப்பு நோக்கங்களுக்காக புதிய தளங்கள் அமைப்பதையும் கைவிடவேண்டும்.
    Colonial powers should not only undertake to liquidate existing bases in colonial territories, but they should also refrain from establishing in colonial territories new bases capable of being used for aggressive purposes..

 21 December 1964, இலங்கை  Nuclear Weapons Free Zone in Africa at the United Nations. Sri Lanka felt that this would be the first step towards the wider application of nuclear-free zones that could cover other areas and zones such as Indian Ocean in future


1970  லூசாகாவில் நடந்த அணி சேரா நாடுகளின் மாநாட்டில் இலங்கை பிரதமர் ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்க இந்து மாக்கடலை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக அறிவிக்கும் திட்டத்தை முன்மொழிந்தார்.
வல்லரசுகளின் ஆயுத போட்டிகளுக்கு இந்து மாக்கடலில் இடம் அளிக்க கூடாது என்றார்.

Bandaranaike took further steps to develop the said proposals into a detailed Indian Ocean Peace Zone concept. She presented it as the Indian Ocean Peace Zone (IOPZ) proposal in the 1970 Nonaligned Movement summit at Lusaka and let the members reflect on the militarization of the Indian Ocean due to the superpower naval rivalry.

January 1971 இல் சிங்கப்பூரில் நடந்த காமன் வெல்த் மாநாட்டிலும் ஸ்ரீ மாவோ அம்மையாரின் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது
 was a favorable platform that Bandaranaike used to further emphasize the same idea because there was a considerable number of Indian Ocean littoral and hinterland states that also held the commonwealth membership..

இந்து மாக்கடல் ஆயுத போட்டிகளற்ற ஒரு பகுதியாக indian ocean  peaceful  zone விளங்குவதற்கு நல்வாய்ப்பு உள்ளதாக இலங்கை கருதியது. ஏனெனில் இந்துமாக்கடலில் உள்ள நாடுகள் எதுவும் அணு ஆயுத நாடுகளாக இருக்கவில்லை
மேலும் வல்லரசுகளின் போட்டி களமாகவும் இப்பகுதி இருக்கவில்லை.
Against such a backdrop, Bandaranaike believed that the adoption of the IOPZ proposal would not involve serious actions such as dismantling of existing military bases and installations.


October 1971  ஐ நா பொதுச்சபையில் பிரதமர் ஸ்ரீ மாவோ பண்டராயனாக  இது பற்றி பேசினார்
பின்பு 16 December 1971 இத்தீர்மானம் தான்சானியாவின் அனுசரணையோடு விவாதத்திற்கு எடுத்து
கொள்ளபட்டது.
மூன்றாவது உலக நாடுகளின் ஆதரவு பெருமளவில் இருந்தது.


இது பற்றிய நடைமுறை சாத்தியங்களை  ஆராய்வதற்கு ஐ நா பொதுச்சபையால் 15 உறுப்பு நாடுகளை கொண்ட  ஒரு தற்காலிக குழு அமைப்பட்டது.
இந்த குழுவிற்கு தலைவராக இலங்கை பிரதிநிதி திரு ஷெர்லி அமரசிங்கா தெரிவு செய்யப்பட்டார்.
இவரின் தெரிவு இலங்கைக்கு கிடைத்த ஒரு ராஜதந்திர வெற்றியாக அப்போது கருதப்பட்டது

The General Assembly appointed an ad-hoc committee consisting of 15 member states to study the practical implications of adopting the proposal. Shirley Amarasinghe was appointed as the Chairman of the committee.
Sri Lanka came into the limelight of the issue, with her securing the chairmanship

    The countries of the region should commit themselves to a policy of denuclearization.
    The Indian Ocean within limits to be determined, together with the air space above and the ocean floor subjacent thereto, is hereby designated for all time as a zone of peace.
    The nuclear powers should undertake the obligation not to deploy nuclear weapons in IOPZ (UN Archives, 27th Session folder).
இந்த குழு 1973 அக்டொபரில் தனது அறிக்கையை கையளித்தது.
ஆனால் இதன் பின்பு நடந்த விடயங்கள் அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை
 

இந்தியா இரகசியமாக அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டது
இது இந்து மாக்கடலை அணு ஆயுதங்களற்ற பகுதியாக அறிவிக்க வேண்டும் என்ற இலங்கையின் முயற்சிக்கு   பெரும் தடையாக இருந்தது!

18 May 1974.இல் ராஜஸ்தானின் பொக்ரான்  Pokhran பாலைவனத்தில் இந்தியாவின் அணுகுண்டு வெடித்தது.
இது இலங்கைக்கு மட்டுமல்லாமல் உலகில் அணு ஆயுதங்களுக்கு எதிரான நாடுகளுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது .
இந்தியாவுக்கு அணு ஆயுதம் தேவையாக  இருந்ததாக இந்திய அரசு கூறியது.
மொத்தத்தில் இந்து மாக்கடல் அணு ஆயுதங்களின் போட்டிக்கு இந்தியா கடை விரித்து விட்டது
 

இந்தியாவை சுற்றி உள்ள பாகிஸ்தான்  சீனா பர்மா போன்ற நாடுகள் ஏற்கனவே இந்தியாவோடு முறுகல் நிலையில்தான் இருந்தன . 1971 இல் இந்திய உதவியால் சுதந்திரம் பெற்ற பங்களாதேஷ் கூட இந்தியாவின் நட்பு நாடக இருக்கவில்லை என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்
அன்று இந்தியாவின் அயலில் இருந்த ஒரே ஒரு நட்பு நாடக இலங்கை மட்டுமே விளங்கியது
அதுவும் இந்துமாக்கடலில் அணு ஆயுத போட்டிக்கு எதிரான முயற்ச்சியில் உலகின் கவனத்தை வெற்றிகரமாக ஈர்த்து கொண்டிருந்த இலங்கையின் அயலிலேயே  அணுக்குண்டு வெடித்தது.

Smiling Buddha என்ற பெயர் சூட்டப்பட்ட அந்த அணு குண்டு புத்த பகவானுக்கு என்ன செய்தியை கூறியது என்பதை காலம்தான் இனி சொல்லவேண்டும்.
 

ஸ்மைலிங் புத்தா என்பதற்கு பதிலாக ஸ்மைலிங் சிவா ஸ்மைலிங்  ராமா ஸ்மைலிங்  அல்லா ஸ்மைலிங் ஜீசஸ் ஸ்மைலிங் சோராஷ்டிரா ஸ்மைலிங் தீர்த்தங்கரர்  என்றெல்லாம் வைத்திருக்கலாம்
 

ஆனால் ஏனோ அமைதியை போதித்த புத்தரை ஏன் இதில் இழுத்து விட்டார்கள் என்பது தெரியவில்லை.

ஒருவேளை புத்தரை போற்றும் இலங்கை இதையிட்டு கண்டனம் தெரிவிக்காது,
மெதுவாக சிரித்து வைக்கும் என்பதை ஏற்கனவே அறிந்திருந்தார்களோ?
அல்லது அதற்கான முயற்சியை முன்பே  தொடங்கி இருந்தார்களோ?   

இந்த இடத்தில இந்திரா காந்தி அம்மையாரும் ஸ்ரீ  மாவோ அம்மையாரும் பல விதத்திலும் மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள்.
இந்திய அணுவெடிப்புக்கு எதிராக இலங்கை பெரிதாக குரல் கொடுக்கவில்லை
 

அப்படி குரல் கொடுத்திருந்தால் ..
நிச்சயமாக உலக அரங்கில் அது இந்தியாவின் சமாதான பெயருக்கு ஒரு சவாலை கொடுத்திருக்கும்     
இந்தியாவின் ஏனைய அயல் நாடுகள் இந்தியாவோடு ஏற்கனவோ பல போர்முனைகளை கண்டவர்கள்
அடிக்கடி எல்லைகளில் முறுகல் நிலைகொண்டவர்கள்
அந்நாடுகளின் அபிப்பிராயங்கள் இந்திய அரசின் அணு ஆயுத தேவைக்கு ஒரு வலு சேர்த்திருக்கும்
 

ஆனால் இலங்கையின் நிலை முற்றிலும் மாறானது
இந்த பின்னணியில்தான் திருமதி இந்திரா காந்தி அம்மையாரும் திருமதி ஸ்ரீ மாவோ அம்மையாரும் செய்து கொண்ட கச்சத்தீவு  உடன்படிக்கையை நோக்க வேண்டும் என்ற ஒரு கருத்து இருக்கிறது
 

 28 June 1974.இல் கச்சத்தீவு ஒப்பந்தம் கைச்சாத்தானது

கச்சதீவானது இலங்கை வடபகுதியில் உள்ள தீவு கூட்டங்களின் நெருக்கத்தில் உள்ளது
அதில் உள்ள ஒரு தீவில் ஒரு அணு ஆயுத நாடு காலூன்றுவது என்பதை உலகின் பார்வைக்கு திருமதி ஸ்ரீமாவோ அம்மையார்  வைத்திருக்க கூடும் .என்ற ஒரு கருத்தும் உள்ளது.

போக்ரான் அணுக்குண்டானது  இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலவிய நல்லுறவை கொஞ்சம் கூட கெடுக்க  இருபகுதியும் இடம் கொடுக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது.
 

இரு நாட்டு தலைவர்களும்  ராஜதந்திரத்தோடு நடந்து கொண்டிருக்கிறார்கள்
இந்த நல்லுறவை சங்கிகள் தங்கள் சுயநலத்திற்காக  கெடுத்து விடாமல் மக்கள் பாதுகாக்க வேண்டும்!   .
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக