ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

விஜய பிரபாகரன் தம்பிக்கு Porsche கார் பிறந்தநாள் பரிசாக கொடுத்துள்ளார்! இதற்குத்தானா ஆசைப்பட்டாய் ரசிகா

தம்பி சண்முக பாண்டியனுக்கு காஸ்ட்லி காரை பரிசாக கொடுத்த அண்ணன் விஜய பிரபாகரன் மாலை மலர் நடிகர் மற்றும் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டில் உடல் நலக்குறைவால் காலமான சூழலில் அவரது சமாதிக்கு தினந்தோறும் ஏராளமான ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

இன்று விஜயகாந்த் மறைந்து 100 நாள் நிறைவடைந்த நிலையில் அவரது நினைவிடத்தில் மகன் சண்முக பாண்டியனுடன் சென்ற பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து, விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த ஏராளமான பொதுமக்களுக்கு பிரேமலதா அன்னதானம் வழங்கினார்.


இந்நிலையில் இன்றைய தினம் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் தன்னுடைய 31வது பிறந்த நாளை எளிமையான முறையில் கொண்டாடி வருகிறார். அவரது நடிப்பில் உருவாகி வரும் படை தலைவன் படத்தின் டீசர் இன்றைய தினம் பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியானது.
சண்முக பாண்டியன் இந்த ஆண்டில் தன்னுடைய அப்பாவை இழந்து முதல் முறையாக அவர் இல்லாமல் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதனால் அவரது பிறந்தநாள் மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் சண்முக பாண்டியன் பிறந்தநாளை சிறப்பாக்கும் வகையில் அவரது அண்ணன் விஜய பிரபாகரன் தம்பிக்கு காஸ்ட்லியான Porsche கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். இந்த விஷயம் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக