வெள்ளி, 12 ஏப்ரல், 2024

அண்ணாமலை Files : பாஜக அதிமுக பணத்தை கொள்ளையடித்து வாங்கிய அண்ணாமலை யார் சேம்பர்*

May be an image of text

Vasu Sumathi ; அரவக்குறிச்சி தேர்தலில் அண்ணாமலை வசூலித்த ஊழல் பணம் அண்ணாமலையார் சேம்பர் நிறுவனமாக மாறியது எப்படி?
கூட்றா பிரஸ்ஸ, குட்றா பேட்டி.. இது பொய் னு சொல்லு பார்க்கலாம்!
கடந்த 20 21 சட்டமன்றத் தேர்தலில் பாஜக துணைத் தலைவராக இருந்த அண்ணாமலை கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத்தில் களமிறங்கினார்.
இவருக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அரவக்குறிச்சியில் தங்கி பிரச்சாரம் செய்தார்.
அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக இவரை ஜெயிக்க வைக்க வேண்டியது அதிமுகவின் பொறுப்பு என்று கூறியதால் அதிமுகவினர் ஓட்டுக்கு ரூபாய் ஆயிரம் என 15 கோடிக்கு மேல் செலவு செய்தனர்.
ஓட்டுக்கு 1000 ரூபாய் கொடுத்ததை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று உறுதி செய்தார்.
அதிமுகவினரின் பணம் மட்டும் இல்லாமல் பாஜக தேசிய செயலாளர் பிஎல்.சந்தோஷ் மூலம் கர்நாடகாவில் இருந்து கணிசமான பணத்தையும் ஆட்களையும் இறக்குமதி செய்தார் அண்ணாமலை.

ஆனால் அந்தப் பணத்தை முழுவதுமாக செலவு செய்யாமல் முதலீடாக மாற்ற திட்டமிட்டு அதனை தனது சொந்த சகோதரியின் கணவர் சிவக்குமாரிடம் கொடுத்துள்ளார்.
ஏற்கனவே கரூரில் குவாரி நடத்தி வரும் சிவக்குமார் அடிச்சது லக்கி பிரைஸ் என்று அந்த வசூல் பணத்தில் தேர்தல் முடிந்த ஓராண்டுக்குள் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அமரபூண்டி - புளியம்பட்டி கிராமத்தில் மச்சான் பெயரிலேயே *அண்ணாமலையார் சேம்பர்* என்ற‌ பெயரில் மிகப்பெரிய செங்கல் நிறுவனத்தை அமைத்துள்ளார் இதற்காக 24 ஏக்கர் நிலத்தை அமரபூண்டி -புளியம்பட்டி கிராமத்தில்
(சர்வே நம்பர் 169/B, 20/1A2, 20/1B2 மற்றும் 168)
திண்டுக்கல் சத்திரப்பட்டி செந்தில்குமார் உடன் சேர்ந்து பல கோடியை முதலீடு செய்து சிவக்குமார் வாங்கியுள்ளார்.

இந்த இடத்தில் பெரிய அளவில் செங்கல் சேம்பர், உயர்நிலை நீர்த்தேக்க தொட்டி, மின் வசதி, அலுவலகம்,
பணியாளர் அறை என இதுவரை பல கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 10 லட்சம் யூனிட் மண் வாங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதிலும் மச்சான் சேம்பருக்கு விலை குறைத்து மண் இறக்க வேண்டும் என்று மணல் கரிகாலனை மிரட்டி அண்ணாமலை வாங்கி உள்ளதாகவும் தெரிகிறது.

சாதாரணமாக இரண்டு தகர டப்பாவை எடுத்துக்கொண்டு கல்லூரியில் சேர்ந்த அண்ணாமலை குடும்பம் நடத்துவதற்காகவே நண்பர்களிடம் பணம் ஆகும் அண்ணாமலைக்கு கோடிக்கணக்கில் முதலீடு செய்யும் மச்சான இருப்பது எப்படி என்பது தான் புரியவில்லை.
எம்பி, எம்எல்ஏ , கவுன்சிலர் என எந்த பதவியும் இல்லாத போது இப்படி கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் அண்ணாமலைக்கு பொறுப்பு கிடைத்தால் என்ன ஆகும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக