ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

ஜார்கண்ட்டில் அணிதிரண்ட எதிர்க்கட்சி தலைவர்கள்!

தினமணி : (ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் ஆதரவாளர்கள்படம் | பிடிஐ
ஜார்கண்ட்டில் ஆளும் ’ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா’ கட்சி சார்பில் ராஞ்சியில் இன்று(ஏப். 21) 'புரட்சிப் பேரணி’ என்ற பெயரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதில், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின்(தற்போது சிறையிலடைக்கப்பட்டுள்ளார்) மனைவி கல்பனா சோரன், ஜார்கண்ட் முதல்வர் சம்பாயி சோரன், பஞ்சாப் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவருமான பகவந்த் மான், பிகார் முன்னாள் துணை முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ், காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் இந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.


இதனிடையே, இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. உடல்நலக்குறைவால் அவரால் இந்த பொதுக்கூட்டத்தில் கல்;அந்துகொள்ள இயலவில்லை என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. ஆனால், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக