செவ்வாய், 16 ஏப்ரல், 2024

என் தம்பி பக்கம்தான் நிற்பேன் என்றார்”: வாக்குச் சேகரிப்பின் ஆ.ராசா குறித்து அமைச்சர் உதயநிதி

கலைஞர் செய்திகள் Prem Kumar  :   இந்தியா கூட்டணி சார்பில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது கூடி இருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உங்களுடைய எழுச்சியும் ஆர்வத்தையும் பார்க்கும் போது,
உதயசூரியன் சின்னத்தில் நிற்கும் வேட்பாளர் ஆ.ராசாவை பெறுவாரியாக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். ஏப்ரல் 19ஆம் தேதி வாக்கு செலுத்தி மோடியின் தலையில் குட்டு வைப்பீர்களா என  பொதுமக்களிடம் கேட்டார்.

“என் தம்பி பக்கம்தான் நிற்பேன் என்றார்”: வாக்குச் சேகரிப்பின் ஆ.ராசா குறித்து அமைச்சர் உதயநிதி நெகிழ்ச்சி

2019 மக்களவைத் தேர்தலில் ஆ.ராசாவை 2 லட்சத்து 6 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் இந்த தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால், இந்த முறை குறைந்தது 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஆ.ராசாவை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

வேட்பாளர் ஆ.ராசாவுக்கு வாக்கு கேட்க வந்திருப்பது மிகப்பெரிய பெருமை என்றால். பெரியாரின் கொள்கை வடிவம், பேரறிஞர் அண்ணாவின் அறிவு வடிவம், கலைஞரின் சுயமரியாதை வடிவம், நம் தலைவரின் அன்பு தம்பி, அவர்தான் நம் வேட்பாளர் என்றார். இளைஞர் அணியின் வழிகாட்டியாக நான் ஆ.ராசாவை கேட்டு வாங்கினேன் எனக்கு கூறினார். 2ஜி வழக்கில் பொய் வழக்கு 8 என்னென்ன பிரச்சனைகள் கொடுத்தார்கள் என உங்களுக்கே தெரியும்.

தலைவர் கலைஞர் என் தம்பி பக்கம் நான் நிற்பேன். என் தம்பியை கூட இருந்து நான் காப்பாற்றுவேன் என கூறினார். ஒற்றையளாக நின்று உச்ச நீதிமன்றம் சென்று போராடி வெற்றி பெற்று அதிலிருந்து அனைத்து பிரச்சனைகளும் சூழ்ச்சிகளையும் வீழ்த்தியவர் ஆ.ராசா.

“என் தம்பி பக்கம்தான் நிற்பேன் என்றார்”: வாக்குச் சேகரிப்பின் ஆ.ராசா குறித்து அமைச்சர் உதயநிதி நெகிழ்ச்சி

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் செய்துள்ள பணிகளை பட்டியலிட்டார். மேட்டுப்பாளையத்தில் புதிய பேருந்து நிலையம் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சிறுமுகை காந்தவை ஆற்றின் குறுக்கே 15 கோடி ரூபாய் புதிய பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

தேர்தல் வாக்குறுதிகளையும் பட்டியலிட்டார். மேட்டுப்பாளையம் சத்தியமங்கலம் ஈரோடு கோபிசெட்டிபாளையம் ஆகிய வழித்தடங்களை உள்ளடக்கிய அகல ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படும். மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும். காரமடை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏழு ஊராட்சிகள் பயன்பெறும் வகையில், அத்திக்கடவு அவிநாசி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூன்றாம் கட்ட பணிகள் விரிவாக்கம் செய்யப்படும். மேற்கு தொடர்ச்சி மலை ஓட்டி உள்ள கிராமங்களில் மனிதர்கள் வனவிலங்கு மோதல் தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும். மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும்.

“என் தம்பி பக்கம்தான் நிற்பேன் என்றார்”: வாக்குச் சேகரிப்பின் ஆ.ராசா குறித்து அமைச்சர் உதயநிதி நெகிழ்ச்சி

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது நாம் நிறைவேற்றிய திட்டங்களை பட்டியலிட்டர். நாம் ஆட்சி பொறுப்பு ஏற்றதும், சட்டமன்ற தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதியை அனைத்தும் நிறைவேற்றியுள்ளோம். அதில் 4 திட்டங்களை சுருக்கமாக தெரிவித்த அவர் கட்டணம் இல்லா பேருந்தின் மூலம் 465 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர். கோவை மாவட்டத்தில் மட்டும் 27 கோடி பெண்கள் கட்டணமில்லா பேருந்தில் பயணம் செய்துள்ளீர்கள். இதனால் மாதம் ரூபாய் 800 முதல் 900 முறை பெண்கள் சேமித்து வருகின்றனர்.

காலை உணவு திட்டம் 18 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகிறார்கள். இந்த திட்டத்தை கர்நாடகா, தெலுங்கானா மட்டுமல்ல, கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் லுடோ கனடாவில் அமல்படுத்தியுள்ளார். இந்திய நாட்டில் மட்டும் இல்ல உலகத்தில் உள்ள அனைத்து நாட்டு மக்களுக்கும் எடுத்துக்காட்டாக நம்முடைய திராவிட மாடல் அரசின் திட்டம் இருந்துள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும் 80,000 குழந்தைகள் காலை உணவு திட்டத்தில் பயன் பெற்று வருகின்றனர்.

“என் தம்பி பக்கம்தான் நிற்பேன் என்றார்”: வாக்குச் சேகரிப்பின் ஆ.ராசா குறித்து அமைச்சர் உதயநிதி நெகிழ்ச்சி

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் 1 கோடியே 16 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இதில் சில சில குறைபாடுகள் இருந்தாலும் தேர்தல் முடிந்த பிறகு அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றார். இந்த கோவை மாவட்டத்தில் மட்டும் 5,00,000 பெண்கள் மகளிர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர்.

புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக ஏராளமான பெண் பிள்ளைகள் கல்லூரியில் சேர்ந்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் மட்டும் 14,000 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். நாம் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் கொரோனா காலத்தில் கோவிட் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய ஒரே அரசு தமிழ்நாடு அரசு. கோவையில் கோவிட் பெருந்தொற்று காலத்தில் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை நேரில் சந்தித்த ஒரே முதலமைச்சர் நம் தமிழ்நாடு முதலமைச்சர் தான் என்றார்.

“என் தம்பி பக்கம்தான் நிற்பேன் என்றார்”: வாக்குச் சேகரிப்பின் ஆ.ராசா குறித்து அமைச்சர் உதயநிதி நெகிழ்ச்சி

நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சியில் தான் வந்தது கூட இருந்தது திமுக கூட்டணி என்று, ஆமாம் 2010ல் நீட் தேர்வு இந்தியா முழுவதும் வந்தது. ஆனால் தமிழ்நாட்டில் வரவில்லை ஏனென்றால், கலைஞர் முதலமைச்சராக இருந்தார்கள். நீட் தேர்வு எங்களுக்கு தேவையில்லை. பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் போதும் எனக் கூறினார். எனவே நுழைவு தேர்வை ரத்து செய்தார் கலைஞர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை தமிழ்நாட்டில் நீட் தேர்வு வரவில்லை.

ஆனால், ஜெயலலிதா மறைந்த பிறகு இந்த அடிமை அதிமுக கூட்டத்தை வைத்து தமிழ்நாட்டில் நீட் தேர்வு கொண்டு வந்து அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா இறந்தார். அனிதாவில் ஆரம்பித்து சென்னையில் ஜெகதீசன் என்ற மாணவர் வரை 22 மாணவர்கள் இறந்துள்ளனர். இறுதியாக ஜெகதீசனின் தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். 22 குழந்தைகளின் இல்லத்திற்கும் நேரில் சென்றது நான் மட்டும் தான். அந்த உரிமையில் தான் நீட் தேர்வு வேண்டாம் என போராட்டம் செய்து வருகிறோம்.

“என் தம்பி பக்கம்தான் நிற்பேன் என்றார்”: வாக்குச் சேகரிப்பின் ஆ.ராசா குறித்து அமைச்சர் உதயநிதி நெகிழ்ச்சி

கடந்த 9 வருடத்தில் அனைத்து மாநில உரிமைகளையும் இழந்துள்ளோம். முக்கியமாக மொழியுரிமை. மோடி பத்து நாள் மட்டுமல்ல தமிழ்நாட்டிலேயே தங்கியிருந்தாலும் கூட ஒரு இடத்தில் கூட ஜெயிக்க முடியாது என தெரிவித்தார். கடந்த 10 வருடத்தில் இந்தியாவை ஆண்டதில் ஏதாவது செய்தாரா என கேள்வி எழுப்பிய அவர் 2016 ஆம் ஆண்டு நடுராத்திரி எழுந்து என்ன பண்ணுவது என்று தெரியாமல் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். லட்சக்கணக்கானோர் ஏடிஎம் வாசலில் நின்று இறந்தனர். ஏன் என்று கேட்டால் கருப்பு பணத்தை ஒழித்து புதிய இந்தியா பிறக்கும் என்றார்.

அனைவரின் வங்கி கணக்கிலும் கருப்பு பணமான 15 லட்சம் செலுத்தப்படும் என தெரிவித்தார். ஆனால் 15 பைசா கூட ஒருவர் வங்கியிலும் போடவில்லை என்றார். தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயல் வந்தது அப்போதெல்லாம் மோடி எட்டிப் பார்க்கவில்லை. அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிதி அளித்தார். ஒன்றிய அரசிடம் நிதி கேட்டதற்கு நிதி அமைச்சர் வந்து பார்வையிட்டு சென்றார்.

“என் தம்பி பக்கம்தான் நிற்பேன் என்றார்”: வாக்குச் சேகரிப்பின் ஆ.ராசா குறித்து அமைச்சர் உதயநிதி நெகிழ்ச்சி

ஆனால் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். 6.30 லட்சம் கோடி ரூபாய் ஒரு வருடத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து வரியாக வழங்குகிறோம் ஆனால் நமக்கு ஒன்னே முக்கால் லட்சம் கோடி மட்டுமே திருப்பி வழங்குகிறார்கள். அதாவது ஒரு ரூபாய் தமிழ் நாட்டு மக்கள் வரியாக கொடுத்தால் 29 பைசா மட்டுமே நமக்கு திருப்பி தருகிறார்கள் என்றார். அதனால்தான் மிஸ்டர் 29 பைசா மோடி அவர்களை அழைக்க வேண்டும்.

ஒன்றிய பாரத ஜனதா அரசின் ஊழல்களை பட்டியலிட்டு பேசிய அவர் சிஏஜி அமைப்பு ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை வெளியிடுவார்கள். ஒன்றிய அரசு செலவு செய்த கணக்கில் ஏழரை லட்சம் கோடி கணக்கில் இல்லாமல் உள்ளதாக தெரிவித்துள்ளது. துவாரகா சாலை திட்டத்தில் ஒரு கிலோமீட்டர் சாலை இடுவதற்கு 250 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். மருத்துவ காப்பீடு திட்டத்தில் இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு மருத்துவ காப்பீடு திட்டம் கொடுத்து உள்ளனர். இந்த 10 வருட ஆட்சியில் பாரதிய ஜனதா பல லட்சம் கோடி ஊழல் செய்துள்ளது.

“என் தம்பி பக்கம்தான் நிற்பேன் என்றார்”: வாக்குச் சேகரிப்பின் ஆ.ராசா குறித்து அமைச்சர் உதயநிதி நெகிழ்ச்சி

இதற்கெல்லாம் பாடம் புகட்ட வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி உங்களுடைய வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அடுத்த 3 நாட்கள் இந்த பிரச்சாரத்தை மக்களிடம் வீடு வீடாக சென்று நீங்கள் தான் கொண்டு சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இவர்களுக்கு எல்லாம் பாடம் புகட்ட ஜூன் மூன்றாம் தேதி முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாள், ஜூன் நான்காம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாள். அவரின் இந்த 100ம் ஆண்டு நூற்றாண்டு விழாவில் அவருக்கு தேர்தல் வெற்றியை பரிசாக நாம் எல்லோரும் கொடுப்போம் என்றார்.

இக்கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், தோழமை இயக்கங்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக