செவ்வாய், 9 ஏப்ரல், 2024

மலையக காய் கறிகளின் விலை வீழ்ச்சி! கவலையில் மலையக விவசாயிகள்

 மலையோரம் செய்திகள் : மலையக மரக்கறிகளின் விலைகள் நாளாந்தம் வீழ்ச்சியடைந்து வருவதால், மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக நுவரெலியா மாவட்ட சிறு மலையக மரக்கறி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது மலையகத்தில் அனைத்து மரக்கறிகளின் விலையும் மிகவும் குறைந்துள்ளது,
ஒரு கிலோ வெண்டைக்காய் 170 ரூபாவாகவும்,
கெரட் ஒரு கிலோ 270 ரூபாவாகவும்,
ஒரு கிலோ முட்டைக்கோஸ் 170 ரூபாவாகவும்,
உருளைக்கிழங்கு ஒரு கிலோ 260 ரூபாவாகவும்,
ஒரு கிலோவாகும். சோளம் 70 ரூபாவாகவும்,
பீட்ரூட் கிலோ 120 ரூபாவாகவும்,
கீரை கிலோ 70 ரூபாவாகவும்,
நேற்று (09) ஒரு கிலோ மிளகாய் மொத்த விலையில் 400 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ுவரெலியா மாவட்டத்தில் சிறிய அளவிலான மலையக மரக்கறி செய்கையாளர்களும், பாரிய தோட்டத்தில் சிறிய அளவிலான மலையக மரக்கறி செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் இந்த நிலைமையை எதிர்கொண்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


புத்தாண்டு சீசன் தொடங்கி, ஒவ்வொரு புத்தாண்டு காலத்திலும் காய்கறிகளின் விலை உயரும் என எதிர்பார்த்து, வங்கிகளில் தங்க ஆபரணங்களை அடகு வைத்து, பல்வேறு கடன்களை வாங்கி பயிர்கள் செய்த நிலையில், இந்த ஆண்டு, மலையக காய்கறிகளின் விலை, எதிர்பாராதவிதமாக சரிந்தது உள்ளது என  மரகறி விவசாயிகளும் கூறுகின்றனர்.
மஸ்கெலியா  விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.09.04.2024.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக