திங்கள், 15 ஏப்ரல், 2024

பாகிஸ்தானில் மனைவி, 7 குழந்தைகளை கோடரியால் வெட்டிக்கொன்ற கூலித்தொழிலாளி

மாலைமலர் : “இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் அலிபூரைச் சேர்ந்தவர் சஜ்ஜத் கோகர். இவரது மனைவி கவுசர் (வயது 42). இந்த தம்பதியினருக்கு 4 மகன்கள் மற்றும் 3 மகள்கள் இருந்தனர்.
இவர்கள் அனைவருமே 8 மாதம் முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் ஆவர். இந்தநிலையில் சஜ்ஜத் கூலி வேலை பார்த்து வந்தார்.
ஆனால் தனது குடும்பத்தை காப்பாற்றக்கூடிய அளவுக்கு அவருக்கு போதிய வருமானம் இல்லை என கூறப்படுகிறது.
இதனால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் தனது குழந்தைகளுக்கு வயிறார உணவு கூட வழங்க முடியவில்லையே என்ற மன உளைச்சலில் சஜ்ஜத் இருந்துள்ளார்.இந்தநிலையில் சஜ்ஜத்துக்கும், மனைவி கவுசருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த சஜ்ஜத் வீட்டில் இருந்த கோடரியை எடுத்து தனது மனைவியை வெட்டிக் கொன்றார்.

மேலும் ஆத்திரம் அடங்காத அவர் பெற்ற குழந்தைகள் என்றும் பாராமல் தனது 7 குழந்தைகளையும் அதே கோடரியால் சரமாரியாக வெட்டினார்.

இதில் அந்த குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதனையடுத்து சஜ்ஜத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெற்ற குழந்தைகளை தந்தையே வெட்டிக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே இந்த சம்பவத்தில் பலியானவர்களுக்கு பலுசிஸ்தான் மாகாண முதல்-மந்திரி மரியம் நவாஸ் ஆழ்ந்த தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.”,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக