வியாழன், 11 ஏப்ரல், 2024

செயின் பறிப்பு வழக்கில் கைதான 3 வடமாநில இளைஞர்களுக்கு எலும்பு முறிவு

சென்னை: செயின் பறிப்பு வழக்கில் கைதான 3 வடமாநில இளைஞர்களுக்கு எலும்பு முறிவு

 மாலை மலர்: சென்னை: செயின் பறிப்பு வழக்கில் கைதான 3 வடமாநில இளைஞர்களுக்கு எலும்பு முறிவு
கடந்த 7-ம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் தலைமைக் காவலர் சுரேஷ் பாபுவின் மனைவி சுபாஷினி தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இருசக்கர வாகனம் மூலம் வீட்டிற்கு திரும்பினார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு பேர் அவரது கழுத்தில் இருந்த நான்கு சவரன் தாலி செயினை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுதொடர்பாக சுபாஷினி ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், மீண்டும் கடந்த 9ம் தேதி அன்று பெரம்பூர் மேம்பாலம் கீழ்பகுதியில் சாமுண்டீஸ்வரி என்ற பெண்ணிடம் இருந்து மர்ம நபர்கள் 2.5 சவரன் தாலி செயின் பறித்து சென்றுள்ளனர்.
இந்த செயின் பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் ஹரியானாவைச் சேர்ந்த மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.



ஹரியானாவைச் சேர்ந்த சச்சின் குமார் (24), அங்கித் (24), அங்கித் யாதவ் (26) ஆகிய மூவரும் சுற்றுலா செல்வதாக சென்னை வந்து, இரு பைக்குகளை வாடகைக்கு எடுத்து நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர்களை பிடிக்க முயன்ற போது மூவரும் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக