திங்கள், 25 மார்ச், 2024

மதிமுக துரைவைகோ வேட்புமனு தாக்கலில் திடீர் குழப்பம்!

மின்னம்பலம் -Selvam :  திமுக கூட்டணியில் திருச்சி நாடாளுமன்றத்தொகுதி வேட்பாளராக போட்டியிடும் மதிமுக துரை வைகோ நாளை (மார்ச் 25) வேட்புமனு தாக்கல் செய்வார் என்றும் நாளை மறுநாள் (மார்ச் 26) மலைக்கோட்டையிலிருத்து பிரச்சாரத்தை தொடங்குவார் என்றும் திமுக உள்ளிட்ட கூட்டணியினருக்கு தகவல் சொல்லப்பட்டிருந்தது.
இன்று (மார்ச் 24) காலை திருச்சி அறிவாலயத்தில் நேரு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துரை வைகோ கண்ணீருடனும் ஆவேசத்துடனும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து சீட் கிடைக்காததால் மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற ஈரோடு எம்பி கணேசமூர்த்தி கோவை மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். உடனடியாக கோவை விரைந்த துரை வைகோ, கணேசமூர்த்திக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இந்த பரபரப்புக்கு இடையே நாளை துரைவைகோ வேட்புமனு தாக்கல் செய்யமாட்டார் என்ற செய்தி திருச்சி திமுகவினரிடம் மதிமுகவினரால் சொல்லப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக