ஞாயிறு, 24 மார்ச், 2024

ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி மருத்துவமனையில் அனுமதி - தற்கொலை முயற்சி?

மாலை மலர் :  கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்த ம.தி.மு.கவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது.
இந்தத் தொகுதியில் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் நேரடியாக தி.மு.க. போட்டியிடுகிறது.
இந்நிலையில், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நல குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் நிலையில்
அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு என்ன ஆனது என்பது குறித்த முழுமையான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
அதே சமயம், கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த கணேசமூர்த்தி இன்று சல்பாஸ் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக