திங்கள், 25 மார்ச், 2024

சுப்பிரமணியன் சுவாமி : மோடி ஜெயிக்கக்கூடாது; அவரை தோற்கடிக்க வேண்டும்!

 தினமணி ; மதுரை: மோடி ஜெயிக்கக்கூடாது, அவரை தோற்கடிக்க வேண்டும் என ஞாயிற்றுக்கிழமை மதுரையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருப்பது கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பாஜக பிரமுகர் சசிகுமார் இல்ல திருமண நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, தமிழத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களில் நயினார் நகேந்திரன் கட்டாயம் வெற்றி பெறுவார். அண்ணாமலை வெற்றி பெறுவது குறித்தெல்லாம் நான் விசாரணை செய்யவில்லை.எனக்கு அதுகுறித்து எதுவும் தெரியாது.



தமிழகத்தில் திமுக, பாஜக என களம் மாறியுள்ளதாக எல்லோரது கனவு. அது நடக்குமா என்றால் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அனைத்து தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தலாம். கட்சி வலுவாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். பணத்தை கொடுத்து விளம்பரம் செய்தால் மட்டும் வெற்றி பெற்றுவிட முடியாது. மக்கள் நம்ப வேண்டும்.

சீனா இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்ததை பிரதமர் மோடி தடுக்கவில்லை. பொருளாதார ரீதியாக நாம் பின்தங்கி உள்ளோம். மாலத்தீவுடன் பிரச்னை உள்ளது. மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆளுநர் கூட பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜக வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுவது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, அது எனது தலைவலி அல்ல. நான் எல்லாவற்றையும் பையில் வைத்துக்கொண்டு சென்றுவிடுவேன் என நினைப்பதால் மோடி என்னை சற்று தூரமாகவே வைத்துள்ளார். பாஜக தலைமை கேட்டுக்கொண்டால் பிரசாரத்திற்கு செல்வேன். ஆனால் இதுவரை என்னிடம் கேட்கவில்லை என்றார்.

மேலும், திமுகவில் எத்தனை பைத்தியகாரர்கள் உள்ளனர். நான் திமுக ஆட்சியை 2 முறை கவிழ்த்தவன். தற்போது அதற்கான தேவை ஏற்படவில்லை.

மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வருவாரா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது. அவரை தோற்கடிக்க வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். இவரது பேச்சு பாஜகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக