வெள்ளி, 29 மார்ச், 2024

கடந்த 50 ஆண்டுகளில் திமுக சாதியை ஒழித்து விட்டதா ? பெரியார் சாதியை ஒழித்து விட்டாரா?

No photo description available.

Kandasamy Mariyappan :   தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ளும் பாஜக WhatsApp University மாணவர்கள் நக்கலாக கேட்பது...
கடந்த 50 ஆண்டுகளில் திமுக சாதியை ஒழித்து விட்டதா, பெரியார் சாதியை ஒழித்து விட்டாரா.!
இதுநாள் வரையில் சமூக வலைதளங்களில் மட்டுமே பேசி வந்தவர்கள் இப்போது Mainstream Mediaவிலும் பேச ஆரம்பித்து விட்டனர்.!
நான் கிராமத்தில் பிறந்து 52 வயதை கடந்தவன்.!
கடந்த 52 ஆண்டுகளில் கிராமத்தில் சாதிய பார்வை எப்படி மாறியுள்ளது என்பதை தெளிவாக உணர்ந்தவன் என்ற முறையில் கூறுகிறேன்.!
1970 வரையில்...
1. தலித் மக்கள் படிக்கவில்லை.!
2. 80 வயது வரையில் உள்ள தலித் மக்கள், 10 வயது முதல் உள்ள குடியானவர்களை அய்யா, சின்னய்யா, ஆண்டை, ஆஞ்சயி என்றே அழைப்பார்கள்.!  

3. அதேவேளையில் 10 வயதுடைய குடியானவர்கள், 80 வயது தலித் ஆண், பெண்களை ஏ கருப்பா இங்க வாடா, ஏ கருப்பாயி இங்க வாடி என்றுதான் அழைப்பார்கள். அது தவறாக கருதப்படவில்லை.!


4. பறையடிப்பது, பிணம் எரிப்பது உட்பட கட்டாயமாக குடிமைத் தொழில்களை செய்ய வேண்டும்.!
5. இறந்த மாடுகளை தூக்கி கொண்டு போய் சுடுகாட்டருகே போட வேண்டும்.!
6. குடியான தெருவில் செருப்பு அணிந்து செல்ல மாட்டார்கள்.! பீடி புகைத்து செல்ல மாட்டார்கள்.! குடியானவர்கள் வீட்டு (குடிசை வீடுதான்) வாசலில் குக்கி கொண்டு அமர்வார்கள்.!
7. பொது கிணற்றில் தண்ணீர் எடுக்க மாட்டார்கள்.!
8. தலித் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் தவறாக கருதப்படவில்லை.!
1980 வரையில்...
1. தலித் பிள்ளைகள் பள்ளிக்கூடம் செல்கின்றனர்.!
2. பள்ளி செல்லும் மாணவர்கள் தங்களோடு படிக்கும் குடியான மாணவர்களை பெயர் சொல்லி அழைப்பார்கள்.!
அவர்களின் அப்பா, அம்மா வயதுடைய குடியானவர்களை அய்யா, ஆஞ்சயி என்று அழைப்பார்கள்.!
அதேவேளையில் 10 வயது முதல் உள்ள குடியானவர்கள், வயதில் மூத்த தலித் ஆண், பெண்களை ஏ மாரியப்பா இங்க வாடா, ஏ மாரியாயி இங்க வாடி என்று அழைப்பது தவறாக கருதப்படவில்லை.!
3. பறையடிப்பது, பிணம் எரிப்பது உட்பட கட்டாயமாக குடிமைத் தொழில்களை செய்ய வேண்டும்.!
4. இறந்த மாடுகளை தூக்கி கொண்டு போய் சுடுகாட்டருகே போட வேண்டும்.!
5. குடியான தெருவில் செருப்பு அணிந்து செல்ல மாட்டார்கள்.! பீடி புகைத்து செல்ல மாட்டார்கள்.! குடியானவர்கள் வீட்டு (குடிசை வீடுதான்) வாசலில் குக்கி கொண்டு அமர்வார்கள்.!
6. பொது கிணற்றில் தண்ணீர் எடுத்துக் கொள்வார்கள்.!
7. தலித் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் தவறாக கருதப்படவில்லை.!
1990 வரையில்...
1. தலித் இளைஞர்கள் கல்லூரி செல்கின்றனர்.!
2. கல்விச்சாலை செல்லும் தலித் மாணவர்கள் தங்களோடு படிக்கும் குடியான மாணவர்களை பெயர் சொல்லி அழைப்பார்கள்.!
அவர்களின் அப்பா, அம்மா வயதுடைய குடியானவர்களை அத்தை, மாமா என்று அழைப்பார்கள்.!
அதேவேளையில் 30 வயது முதல் உள்ள குடியானவர்கள், வயதில் மூத்த தலித் ஆண், பெண்களை ஏ ரெங்கா இங்க வாடா, ஏ ரெங்கம்மா இங்க வாடி என்று அழைப்பது தவறாக கருதப்படவில்லை.!
3. படிக்காத, விவசாய தொழில் செய்து வரும் தலித் மக்கள், தங்கள் வயதுடைய, தங்களை விட குறைவான வயதுடைய குடியானவர்களை பெயர் சொல்லி அழைப்பார்கள்.!
4. பறையடிப்பது, பிணம் எரிப்பது உட்பட கட்டாயமாக குடிமைத் தொழில்களை செய்ய வேண்டும்.!
5. தலித் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் தவறு என்று வழக்கு பதிந்தனர்.!
2000 வரையில்...
1. தலித் இளைஞர்கள் அரசு வேலைக்கு செல்கின்றனர்.!
2. அரசு வேலையில் உள்ள தலித் பணியாளர்கள், தங்களோடு பணி செய்யும் மற்றவர்களை பெயர் சொல்லி அழைப்பார்கள்.!
குடியானவர்கள், வயதில் மூத்த தலித் மக்களை வாடா, வாடி என்று அழைப்பது இல்லை.!
தலித் இளைஞர்கள் சக குடியான இளைஞர்களை அக்கா, அண்ணா என்றும் பெயர் சொல்லியும் அழைப்பார்கள்.!
3. தலித் மக்கள் பறையடிப்பது, பிணம் எரிப்பது போன்ற குடிமைத் தொழில்களை செய்வதில்லை.!
2010 வரையில்...
1. எல்லா தலித் இளைஞர்களும் படிக்கின்றனர். அரசு வேலைக்கு செல்கின்றனர்.!
2. பள்ளி, கல்லூரிகள், பணியிடங்களில் தங்களோடு படிக்கும் பணி செய்யும் மற்றவர்களோடு சகஜமாக பழகுகின்றனர்.!
2020ல்...
தலித் மக்கள் கல்வி பொருளாதார ரீதியாக வளர்ந்துள்ளனர்.!
தலித் இளைஞர்களோடு மற்றவர்கள் விரும்பி அருகருகே அமர்கின்றனர். சாதாரணமாக உரையாடுகின்றனர்.!
இந்த மாற்றம் ஏதோ சாதாரணமாக ஏற்பட்டு விடவில்லை.!
பெரியாரின் தொடர் முழக்கம்.,
பெரியாரிய, கம்யூனிஸ இயக்கங்களின் தொடர் முழக்கம்.,
திராவிட அரசுகளின் தலித் இட உரிமைகளை உறுபடுத்திய சட்டங்கள்.,
திராவிட அரசுகளின் சட்ட பாதுகாப்பு.!
ஆனால் பாஜக WhatsApp University சாதிய எண்ணத்தை இளைஞர்களிடம் வளர்ப்பதை ஒரு தொழிலாக கொண்டுள்ளது.!
தமிழ்நாட்டில் சாதி மதக்கலவரம் ஏற்படாமல் இருக்க...
உங்களுடன் விவாதத்திற்கு வருபவர்களை தடுத்து நிறுத்த வேண்டியது உங்கள் கடமை.!
புரிதலுக்கு நன்றி.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக