செவ்வாய், 27 பிப்ரவரி, 2024

அனில் அம்பானி நிறுவனம் திவால்.. ரிலையன்ஸ் கேப்பிட்டல்-ஐ கைப்பற்றிய இந்துஜா குழுமம்..!!

அனில் அம்பானி நிறுவனம் திவால்.. ரிலையன்ஸ் கேப்பிட்டல்-ஐ கைப்பற்றிய இந்துஜா குழுமம்..!!

tamil.goodreturns.in  - Prasanna Venkatesh :  இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி-யின் சகோதரன் அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குரூப் நிறுவனமான ரிலையன்ஸ் கேப்பிட்டல் (Reliance Capital Ltd) பெரும் கடன் சுமையால் பாதிக்கப்பட்ட நிலையில்..
இதை கையகப்படுத்தும் இந்துஜா குழுமத்தின் IndusInd International Holdings Ltd (IIHL) நிறுவனத்தின் திட்டத்திற்குத் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT) செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 27) ஒப்புதல் அளித்துள்ளது.
இது ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் நீண்ட கால கையகப்படுத்தல் செயல்பாட்டில் ஒரு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.


இந்துஜா குழுமத்தின் கையகப்படுத்தும் திட்டத்தைத் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி, இந்த விவகாரத்தின் விசாரணையில் தனது தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம், இண்ட்ஸ்இண்ட் வங்கியின் புரமோட்டரான ஐஐஹெச்எல், ரிலையன்ஸ் கேப்பிட்டலைக் கையகப்படுத்த 9,861 கோடி ரூபாய் மதிப்பிலான ஏலத்தை வைத்தது, இது பின்னர் ரிலையன்ஸ் கேப்பிட்டல்-க்கு தீர்வுகாணும் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

ஐஐஹெச்எல் நிறுவனத்தின் ஏல விண்ணப்பத்திற்கு, ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்திற்குக் கடன் கொடுத்தவர்கள் பெரும்பான்மை ஆதரவு தெரிவித்தனர், சொல்லப்போனால் 99 சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் CIRP கீழ் ஏல விண்ணப்பம் சமர்ப்பிப்பது தொடர்பாக, இந்துஜா குழுமம் மற்றும் அகமதாபாத் Torrent Investments நிறுவனத்துடன் வழக்குகள் அதிகளவிலான தாமதத்தை ஏற்படுத்தியது.
அனில் அம்பானி நிறுவனம் திவால்.. ரிலையன்ஸ் கேப்பிட்டல்-ஐ கைப்பற்றிய இந்துஜா குழுமம்..!!

டிசம்பர் 2022 இல் ரிலையன்ஸ் கேப்பிட்டல் வாங்கிய கடனுக்கு தீர்வுகாணும் விதமாக ஏலத்தில் டாரண்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ₹8,640 கோடி மதிப்பிலான ஏல தொகையை முன்வைத்தது. ஆனால், ஏலம் முடிவடைந்த பின்பு, ஐஐஹெச்எல் 9,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஏல தொகை முன்வைத்தது.

இது கடன் வழங்குபவர்களைக் கடன் பாதிக்கப்பட்ட நிறுவனத்திற்கு சிறந்த மீட்பு மதிப்பை உறுதி செய்வதை இருந்தது, இதனால் இரண்டாவது ஏலத்தை அல்லது நீட்டிக்கப்பட்ட சவால் முறையைத் தொடங்க தீர்வுகாணும் முடிவு செய்தது.

இந்த போட்டியால் தோல்வியடைந்த டாரண்ட், இரண்டாவது ஏலம் CIRP விதிமுறைகளை மீறுவதாகக் கூறி நீட்டிக்கப்பட்ட ஏல முறையை எதிர்த்து டாரண்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ஜனவரி 2023 இல் NCLT அமைப்பில் வழக்குத் தொடுத்தது.

இந்த முடிவைக் கடன வழங்குபவர்கள் மார்ச் 2023 இல் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் (NCLAT) எதிர்த்து, இரண்டாவது ஏலத்தை அனுமதிக்கக் கோரினர், இது ரிலையன்ஸ் கேப்பிட்டலில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட மதிப்பை அதிகரிக்கும் வாய்ப்பாகவும், கடன் வழங்கியவர்களின் நலன் மிகவும் முக்கியம் என தெரிவித்தனர்.

இதையடுத்து, ஆகஸ்ட் 2023 இல், டாரண்ட் இன்வெஸ்ட்மெண்ட், IIHL கைப்பற்றும் முயற்சிகளைத் தடுக்கும் முயற்சியில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் NCLT நடவடிக்கைகளை நிறுத்த மறுத்துவிட்டது. இதன் பின்பு ரிசர்வ் வங்கி தலையிட்டு ரிலையன்ஸ் கேப்பிட்டல் கடனுக்கு தீர்வு காணும் பணியை வேகப்படுத்தி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கேப்பிட்டல் சுமார் 16000 கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்த நிலையில், சுமார் 23,666 கோடி ரூபாய் திருப்பி செலுத்த வேண்டியிருந்தது. இதை செலுத்த முடியாத காரணத்தால் தற்போது இந்நிறுவனத்தை வாங்கியது இந்துஜா குழுமத்தின் IndusInd International Holdings Ltd (IIHL) நிறுவனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக