வியாழன், 29 பிப்ரவரி, 2024

ஜெயலலிதாவை நியாயப்படுத்த/ஆதரிக்க எந்த ஒரு காரணமும் கிடைக்காது.

 Uma Pa Se   :  திமுக தலைவர் ஸ்டாலின் வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை Validate செய்வது நீண்டநாள் நோக்கில் சரிவராது என்று சொன்னபோது, அதெல்லாம் ராஜதந்திரம் என்று சில நண்பர்கள் நியாயப்படுத்தினார்கள்.   
ஜெயலலிதா வெறும் ஊழல் குற்றவாளி மட்டுமல்ல, சமூக குற்றவாளி.
ஊழல் மட்டுமே அளவுகோலாக வைத்தால்கூட ஜெயலலிதாவை யாரும் அடித்துக்கொள்ள முடியாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
 இப்படி எந்தவொரு விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் ஜெயலலிதாவை நியாயப்படுத்த/ஆதரிக்க எந்த ஒரு காரணமும் கிடைக்காது.
நேரில் பார்த்து, முழுவதுமாக ஆழ்ந்துணர்ந்து நான் கண்டுகொண்ட சர்வாதிகாரி ஜெயலலிதா தான்.ஜெயலலிதா என்று எழுதினால் கூட அங்கிருந்து என்ன எதிர்வினைவரும் என்று ஜெயலலிதா பெயரை ஜெயலலிதா என்று சொன்ன,எழுதிய ஆட்களுக்குத் தெரியும்.



அந்த ஜெயலலிதாவை சின்ன சந்தர்ப்பங்களில்கூட Validate செய்யவேண்டாம் என்பதை இந்த ஆட்சிவந்து "அம்மா உணவக போர்ட்" பஞ்சாயத்து ஒன்று கிளம்பியபோதும், பைகளில் அந்தம்மா உருவம் தொடர்ந்தபோதும் கூறினோம்.
ஜெயலலிதாவே இப்படி என்றால் அந்தகால தவழ்திரு தலைவர் எம்.ஜி.ஆர் பற்றி சொல்ல வேண்டியது இல்லை.

திமுகவுக்கு எதிரி அதிமுக என்று இருப்பதுதான் சரி, நியாயமும்கூட என்று சொன்னால் காதுகள் கேட்கப்படாமல் போயின.
அல்லது வழக்கமான "இது ராஜதந்திரம் " என்று நியாயவாதம்.
இன்று ஒருபக்கம் போலியான பாஜக எதிர்ப்பைக் கையிலெடுக்கும் அதிமுக, நாங்கள் தான் தீவிர பாஜக எதிர்ப்பாளர்கள் என்று கூசாமல் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக இரண்டாம்கட்ட மூன்றாம்கட்ட தலைவர்கள்.

அதிமுகவின் அடிமடியில் இன்று ராமுவும் அம்முவும் நம் இரு கண்கள் என்று பாஜக ஆரம்பித்திருக்கிறது.
அதிமுகவை அழித்தொழிக்க இனி மோடி தொடங்கி, கடைக்கோடி பாஜக தொண்டர்வரை ராமு ஒரு வள்ளல், அம்மு ஒரு இரும்புப் பெண்மணி, திமுக தான் துரோகி என்று எழுதி ஆனந்தமடைவார்கள்.

போதாதகுறைக்கு இலவச இணைப்பாக 160 வயது அதிமுக அமைச்சர், 185 வயது ஒன்றியச் செயலாளர்கள், சிலபல அதிமுக அமைச்சர்களை விலைக்கோ, வீடியோ காட்டி மிரட்டியோ வாங்குவார்கள். அப்புறம் என்ன இனி பொ.ம.செ புரணமும், மா.மி.இ.தெ.பு.தா புரணாமும் புத்துயிர்பெறும்.

ஜெயலலிதா இல்லாத இந்த சொற்பகாலம் எவ்வளவு நிம்மதியாய் இருக்கிறது, என்று மனசாட்சியுள்ள அனைவருக்கும் தெரியும்.( அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கும்).

இனியாவது ஜெயலலிதா ஒரு குற்றவாளி, ஜெயலலிதா ஒரு சமூக கிருமி, ஜெயலலிதா ஒரு கொடுங்கோலர் என்று சொல்வதோடு, ஜெயலலிதா பெயர் சொல்லி நடந்த குற்றங்களை ஊர்முழுக்க சொல்லிப் பரப்பவேண்டும்.  

டைம் பாஸுக்கு பாஜக எதிர்ப்பும், டைம் பாசுக்கும் தமிழர்நலன் பேசும் கட்சியின் Blueprint முழுக்க முழுக்க திமுக எதிர்ப்பு தான்.
இல்லை வழக்கம்போல் "இது ராஜதந்திரம்" " keep calm , அல்லது சிரிப்புக் குறிகள் தான் பதில் என்றால் கலைஞரின் புகழைப் பரப்பக்கூட நேரம் இல்லாமல், ஜெயலலிதா பற்றியே எடுத்துச்சொல்ல்லிக்கொண்டிருக்கும் சூழலில் வந்து நிற்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக