புதன், 14 பிப்ரவரி, 2024

ஜெர்மனி-ஐரோப்பிய யூனியனில் வெளியேற அழுத்தம்!

 tamil.goodreturns.in - Prasanna Venkatesh :   ஐரோப்பிய யூனியனில் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜெர்மனி நாட்டின் வலதுசாரிக் கட்சியான AfD என்னும் ஜெர்மனிக்கான மாற்றுக் கட்சி, இங்கிலாந்தைப் போன்று ஐரோப்பிய யூனியனிலிருந்து ஜெர்மனியும் வெளியேற வேண்டும் என்று முன்மொழிந்தது.
 AfD-ன் இந்தக் கருத்து ஒட்டுமொத்த ஐரோப்பிய யூனியனில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் தனியாகப் பிரிந்ததில் இருந்து பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில் AfD என்னும் ஜெர்மனிக்கான மாற்றுக் கட்சி-யின் கருத்து அந்நாட்டு அரசியல் வட்டாரத்தில் தீப்பொறியைக் கிளப்பியுள்ளது.


இதில் AfD கட்சி இம்மிகிரேஷனுக்கு எதிரானது, சமீபத்தில் தான் ஜெர்மனி பல குடியேற்ற விதிகளைத் தளர்த்தியது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனி-யில் கிளம்பிய தீப்பொறி.. தனிநாடு வேண்டுமாம், ஐரோப்பிய யூனியனில் அடுத்த 'exit'..!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியதை பிரெக்சிட் (Brexit) என்று அழைக்கப்பட்டது போலவே AfD கட்சியின் முன்மொழிவைத் தொடர்ந்து இணையத்தில் டெக்ஸிட் (Dexit) என்ற சொல் பரவலாகப் பதிவிடப்பட்டு வருகிறது.

ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் ஜெர்மனி-யை தனியாகப் பிரித்தால் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒற்றைச் சந்தையாகச் சிக்கிக்கொள்ளும். இது நாட்டின் பொருளாதாரத்தைப் பாழாக்கிவிடும் என்று ஜெர்மனி நாட்டின் நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் ஏற்றுமதி சார்ந்த ஜெர்மனிக்கு இது மிக மோசமான சூழ்நிலையை உருவாக்கும். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஜெர்மனி வெளியேறுவது நமது பொருளாதாரத்தை அழிக்கும். ஜெர்மனி அரசு கொள்கைக்கு மக்களும், சக நாடுகளும் இணங்கும் முயற்சிகளை எடுக்க வேண்டுமே தவிர மொத்த கட்டமைப்பையும் அழித்துவிடக் கூடாது எனவும் தெரிவித்தார்.

AfD கட்சியின் இந்தத் திட்டம் குறித்து ஜெர்மனி நாட்டின் அரசியல் தலைவர், வர்த்தகத் தலைவர்கள், பொருளாதார வல்லுனர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது மட்டும் அல்லாமல் இது ஜெர்மனி பொருளாதாரத்தைப் பெரும் அழிவை நோக்கி கொண்டு செல்லும் என எச்சரித்துள்ளனர்.

ஆனால் AfD கட்சியின் துணைத் தலைவர் Alice Weidel கூறுகையில் பிரிட்டன் நாட்டில் நடத்தப்பட்டதைப் போல் வாக்கெடுப்பு நடத்தி மக்களே முடிவு செய்யட்டும் எனத் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளுக்கும் உற்பத்தி, நிதி சேவை எனப் பலவற்றுக்கு ஜெர்மனியை நம்பியுள்ளது. இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனில் இருக்கும் 27 நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து பிரிந்தால் மீதமுள்ள 26 நாடுகள் பிற நாடுகளை நாடும். இதனால் ஜெர்மனி 26 நாடுகள் உடனான வர்த்தகத்தை இழக்கும்.

ஜெர்மனியின் உற்பத்தி, வர்த்தகம் என அனைத்திலும் இந்த 26 நாடுகள் உடனான பங்கீடு அதிகமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு தான் ஜெர்மனி நாட்டின் நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னர் EU-வில் வெளியேறுவது ஜெர்மனி பொருளாதாரத்தை அழிக்கும் எனத் தெரிவித்தார்.

ஐரோப்பிய யூனியன் என்பது சுமார் 27 தனித்தனி நாடுகள் அடங்கிய அரசியல் மற்றும் பொருளாதாரப் பகுதியாகும். இதில் இருக்கும் நாடுகள் மத்தியில் பல்வேறு சலுகைகள், தளர்வுகள் மற்ற நாடுகளுக்கு இருக்காது. இதேபோல் கொள்கை, வர்த்தகம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் ஒன்றிணைந்து செயல்படும்.

ஐரோப்பிய யூனியனில் இருக்கும் 27 நாடுகளின் பட்டியல் ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, சைப்ரஸ் குடியரசு, செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லாட்வியா, லிதுவேனியா, லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, போலந்து, ஸ்லோவாக், போர்ச்சுகல் , ஸ்லோவேனியா, ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன்.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக