வியாழன், 15 பிப்ரவரி, 2024

பேருந்து நிலையத்தில் உக்காந்து சாப்பிடறதுக்கான ஹோட்டல் இருக்கனுமா?

May be an image of 8 people

Prasath Priyan :  Then: பேருந்து நிலையத்தில் உக்காந்து சாப்பிடறதுக்கான ஹோட்டல் இருக்கனுமா?
ஏன் ப்ளாட்பார்ம்ல நின்னு சாப்பிடக்கூடாதா?
Now: எதிர்காலத்தில் அப்படி உக்காந்து சாப்பிட மாதிரியான ஹோட்டல்கள் வரும்.
தேவையில்லைங்கிறது ஏன் எதிர்காலத்துல வரனுமாம்?
ஒரே குழப்பமா இருக்குங்க.
கீழே உள்ள படங்கள் மதுரை மாட்டுத்தவாணியில் எடுக்கப்பட்டவை.
எந்த பஸ் ஸ்டாண்ட்டில் அப்படி வசதி இருக்குனு கேட்டவர்களுக்காக.
பெரும்பாலாண பேருந்து நிலையங்கள் , ரோட்டுக்கு அருகில்தான் இருக்கு.
அதனால காலப்போக்கில் அதனைச்சுற்றி ஹோட்டல்கள் வந்திடும்.
பக்கத்துலையே இருக்கிறதால easy யா access பண்ணிக்கலாம்.
ஆனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துல mofussil buses நிக்கிற இடத்துக்கும் ரோட்டுக்கும் ரொம்ப தூரம்.
அதனாலதான் பேருந்து நிலையத்துக்குள்ளே உக்காந்து சாப்பிட மாதிரியான ஹோட்டல் இருந்தா நல்லா இருக்குமேனு.
ஒரு வேளை  இந்த குஷன் வைச்ச ஹோட்டல்களைதான்  கேட்டுகிறானேனு நினைச்சிட்டாங்களோனு தெரியலை.
யாரும் சாப்பிடறதுக்காக பஸ் ஸ்டாண்ட்க்கு போறதில்லை.


ஆனால் , பஸ் ஸ்டாண்ட் போற எல்லோருக்கும் பசிக்கும்தானே?
அவன் கொஞ்ச நேரமாவது உக்காந்து சாப்பிடக்கூடாதா என்ன?
கையில தட்டை ஏந்திக்கிட்டுதான் சாப்பிடனும்னு சொல்றதுக்கு நீங்க யார்?
தேவையில்லாததுனு சொல்லி என் சுயமரியாதை சீண்டி இந்த இரண்டு நாளா என்கிட்ட சண்டை போட்டவங்க,
இப்போ ஏன் எதிர்காலத்துல வரும்னு சொல்லி மழுப்பனும்?
தனியார்களுக்கு டென்டர் விட்டிருந்தால் அதை கண்காணிக்க வேண்டியது அரசின் பொறுப்பு. (தேவையில்லாததுக்கு ஏன் டென்டர் விடனும்னு வேற தெரியலை)
அவன் அடிச்சிருந்தா ஒரு அடியோட போயிருக்கும்.நீ எதுக்கு யூடெர்ன் போட்டு,டேபிள் சேரையெல்லாம் உடைச்சிக்கிட்டு மொமண்ட்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக