திங்கள், 26 பிப்ரவரி, 2024

திரையில் தெரிந்த திராவிட ஆட்சி சுபகுண ராஜன் தொடர்

May be an image of 5 people and text that says 'முரசொலி பாசரை திராலிட திராவிடக் கொள்கைகளை, சமதர்ம நோக் கங்களை, சமூகநீதிச் சிந்தனைகளைத் திரைத்துறை மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தனர் நமது முன்னோடிகள் அந்த வகையில், திரைப்படம் என்கிற கத்தின் அரசியல் மாற்றத்துக்கான திருப்புமுனைகளை ருவாக்கின, திராவிடம் பேசிய திரைப்படங்கள். அந்த வரலாற்றை மீண்டும் பாசிக்கத் தருகிறதுதி திராவிட சினிமா. 43 சினிமா வீ.மா.ச.சுபகுணராஜன் திரையில் பிரதிபலித்த திராவிட ஆட்சி! உருவாக்கப்பட்ட கட்டாயத்துக்கு ஆளானார்கள் திரையில் 'திராவிட மாடல்' இயக்கம், திட்டங்களின் அதனை வாழ்வாக வாழத்தான் செய்வார்களே இருக்க மாட்டார்கள் செய்தியாகு 'திராவிட மாடல்' மாற்றங்கள் நிகழந்தாக திரும்ப'

 Subagunarajan V M S :   ஒரு இயக்கம், அதிலும் ஒரு பெரும் சமூகமாற்றத்திற்காக தன்னை அர்பணித்துக் கொண்ட ஒன்றின் செயல்பாட்டு தளங்களில் ,
காலத்திற்கேற்ற மாற்றங்கள் நிகழ்ந்தாக வேண்டும்.
அதிலும் சாமன்யர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் பதினெட்டே ஆண்டுகளில் ஆட்சிக்கட்டில் அமர்ந்தது இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாபெரும் மைல்கல்தான்.
ஆனால் அதன்வழி பெறப்பட்ட அதிகாரத்தைக் கொண்டு எப்படியான மாற்றங்களை, திட்டங்களை செயல்படுத்தினார்கள் என்பதே அவர்கள் குறித்த மதிப்பீடுகளை உருவாக்கும்.
அது கருதியே அண்ணா, ‘ நமக்குக் கிடைத்திருப்பது பதவியல்ல, பணி செய்யும் வாய்ப்பு ‘ என எச்சரித்து விட்டே ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.
ஆட்சியதிகாரம் பெற்று விட்ட இயக்கம், ஏற்கனவே   திராவிட சினிமாக்கள் மொழிந்த கொள்கைகளையும், கோட்பாடுகளையும் மீளவும் திரையில் பேச முடியாது என்பதுதானே உண்மை.

இப்போது உங்கள் திட்டங்களும், செயல்பாடுகளுமே காட்சியாக/ சாட்சியாக மாற வேண்டும். ஆனால் ஆட்சியாளர்களாய் இருந்து கொண்டு ‘செய்தித்துறைக் காட்சிப் படங்களை’ மட்டுமே உருவாக்க முடியும். அதே பாணியில் வணிகத் திரைப்படங்களாக்க இயலாது.
 
          தமிழக முதல்வர் தலைவர் தளபதியார் தொடர்ந்து சொல்லி வரும் ‘செய்தி’, ‘திராவிட மாடல்’ ஆட்சி என்பது  1967 ஆம் ஆண்டில் ஆட்சிக்கட்டில் ஏறிய அண்ணாவின் ஆட்சிகாலம் துவங்கி இன்று வரை தொடரும் திராவிட ஆட்சிமுறைதான். ஆம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் லட்சியங்களை வேரறுக்கக் கிளம்பிய ’ எதிர்ப்புரட்சியாளர்களும்’ தொடர வேண்டியதாக மாறிய ‘ அனைவரையும் உள்ளடக்கிய சமூகநீதி ‘ ஆட்சியும் கூட இதன் தொடர்ச்சிதான். வேடிக்கையென்னவெனில் ‘ அவர்கள் ‘ திராவிடத்தின் கொள்கைகளைத் தடம் புரட்ட முனைந்த ஒவ்வொரு சமயத்திலும், மிக வேகமாகத் திராவிடக் கருத்தியல் சிந்தனைக் களத்திற்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள் என்பதே.  

    இந்த ‘ திராவிட மாடல் ‘ ஆட்சியின்  சாதனைகளை பட்டியலிடுவது எளிது. ஆனால் திரைப்படங்களாக்க இயலாது. ஒன்றிரண்டு திரைப்படப்  பாடல்கள் வழியாக அரசின் செயல்பாடுகளை திரைப்படத்தில் காட்சிப்படுத்தலாம். எம்ஜிஆர் அவர்கள் கூட 1968 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘ ஒளி விளக்கு ‘ திரைப்படத்தில் ‘ நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க ‘ என்றொரு பாடல் காட்சி அமைத்திருப்பார். அவரும் ஜெயலலிதாவும் ‘ குருவிக்காரர்களாக’ ஆடும் பாடலில்  ‘ படியரசி கிடைக்கிற காலத்திலே நாங்க படியேறி பிச்சை கேட்கப் போறதில்ல. சார்க்காரு ஏழ பக்கமிருக்கயில நாங்க சட்டதிட்ட மீறி இங்க நடப்பதில்ல……. குடிசையெல்லாம் வீடாகும் நேரத்திலே தெருவோரம் குடியேறத் தேவையில்லை ‘ என அரசின் திட்டங்களைச் செயல்பாடுகளைப் பேசும். இது போன்ற இன்னும் சில பாடல்களைக் கூட அடையாளம் காண முடியும். இவையெல்லாம் ஒருவகையில் நேரடியான விளம்பரத்தின் பண்பைக் கொண்டவை. அதிலும் கட்சி மற்றும் ஆட்சியின் பகுதியாக இருப்பவர்கள் அமைக்கும் காட்சிகள் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் இயங்குதளம் குறித்த சாட்சியமாகாது.

    ‘ திராவிட மாடல் ‘ ஆட்சிகளின் சாதனைகளின்  சாட்சியமாக திரைப்படப் பிரதிகளைக் கொள்ள ஒரு நேர்மையான திரைப்பட ஆய்வினைச் செய்தாக வேண்டும். கொள்கை/ கோட்பாட்டு அடிப்படையில் உருவான செயல்படுத்தப்பட்ட  திட்டங்களின் பயன்கள் மக்களைச் சென்றடைந்த விதத்தை திரைமாந்தர்களின் வாழ்வனுபவங்களின் பகுதியாகக் காண்பதே சிறந்த ஆய்வு. திட்டங்கள், செயல்பாடுகள் சமூகமாற்றத்தை உருவாக்கியதற்கான சாட்சியங்களாக பாத்திரங்களின் சொல்லாடல்கள் இருக்கலாம். ஏனெனில் திட்டங்களின் பயனாளிகள் அதனை வாழ்வாக வாழ்த்தான் செய்வார்களே தவிர, சாட்சி சொல்பவர்களாக இருக்க மாட்டார்கள். இன்னும் தெளிவாகச் சொல்வதானால் ‘ பொதுப்புத்தியின்’ பண்பிலேயே ஆட்சிகள் குறித்த குறைபாடுகளும், போதாமைகளும் மட்டுமே மேலோங்கி இருக்கும். எனவே சாட்சியங்களை வாய்மொழி வார்த்தைகளாகக் காண்பது அரிது. எனவே அவற்றை காட்சிப் படிமங்களாகவே கண்டடைய இயலும். இந்த ஆய்வு மிகக் கடினமானது. பெரும் உழைப்பும் கால அவகாசமும் வேண்டுவது.

     இந்த ஆய்வு முறையியலை வகுத்துக் கொள்ள பெரும் திட்டமிடல் வேண்டியுள்ளது. மாதிரிக்கு 1967 ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டிலும் வெளிவந்த திரைப்படங்களில், சமூக இருப்பு காட்சிப்படும் திரைப்படங்களைத் தேர்ந்து அவற்றைக் காண வேண்டும். அவற்றில் நேரடியாக  திமுக வோடு தொடர்பற்றவர்களின் படங்களாக இருக்க வேண்டும். இந்த முறைமையைத்  திட்டமிடத் தீர்மானிக்க 1970 ஆம் ஆண்டின் இரண்டு திரைப்படங்களைப் பார்த்தேன். முதல் படம் ‘ மாணவன் ‘ என்றொன்று. ஜெய்சங்கர், லட்சுமி நாயகன் நாயகி. தேவர் பிலிம்ஸ் எம் எ திருமுகம் இயக்கியது. இந்தத் திரைப்படத்தின் காலம் 1965 ல் துவங்கி 1970 ஆம் ஆண்டில் நிறைவு பெறுகிறது. பெரும்பாலும் பள்ளி, கல்லூரி மாணவர், போராட்டம் என நகரும் படத்தில் மொழிப் போர் இல்லை. ஆனால் போராட்டம் கூடாது எனப் பேசும் தேசிவாதக் குரல். இன்னொரு படம் கிருஷ்ணன் – பஞ்சு இயக்கத்தில் ஏவிஎம் ராஜன், ஜெயலலிதா நடித்த ‘ அனாதை ஆனந்தன் ‘ .  இந்தத் திரைப்படங்களில் காட்சிப்பட்ட ‘ திராவிட மாடல்’ ஆட்சியின் சாட்சியங்களை அடுத்த வாரம் பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக