சனி, 3 பிப்ரவரி, 2024

இலங்கையில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஏப்ரல் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில்.. பவதாரிணி மறைவால் நின்றுபோன .

hirunews.lk : இலங்கையில் இளையராஜாவின் இசை நிகழ்விற்கான புதிய திகதிகள் அறிவிப்பு!
இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்ட இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் என்றும் ராஜா ராஜாதான் என்ற இசை நிகழ்விற்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, குறித்த நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் இடம்பெறும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ரட்ணம் பாஸ்கர்  தெரிவித்துள்ளார்.
குறித்த இசை நிகழ்வு சூரியனின் ஊடக அனுசரணையில் கடந்த மாதம் 27 மற்றும் 28 திகதிகளில் கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவிருந்தது.
எனினும், இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் புதல்வியும் பின்னணி பாடகியுமான பவதாரிணி, புற்றுநோய் காரணமாக இலங்கையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் காலமானார்.

இதனையடுத்து கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில், என்றும் ராஜா ராஜாதான் என்ற இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்காக ஏற்கனவே நுழைவு சீட்டுக்களை பெற்றுள்ள மற்றும் பதிவு செய்துள்ளவர்கள், அந்த நுழைவுசீட்டுக்களையே பயன்படுத்தி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள நிகழ்ச்சியினை பார்வையிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக