செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

1974 - 2024 -தமன்னா ஹரிஹரன் நிகழ்ச்சியும் 4 வது உலக தமிழாராய்ச்சி மாநாடும்


ராதா மனோகர்:  1974 இல் யாழ்ப்பாணத்தில் நடந்த நான்காவது உலக தமிழாராய்ச்சி மாநாடு நடந்து சரியாக ஐம்பது வருடங்கள் ஆகிவிட்டது!
தற்போது அதே யாழ்ப்பாணத்தில் அதற்கு இணையான ஒரு  பெரிய விபத்து நடந்திருக்க கூடிய  வாய்ப்பு  அதே யாழ் முற்றவெளி மைதானத்தில் நடந்த இசை நிகழ்வுக்கும்  உள்ளது.
இசை நிகழ்வு ஏற்பாட்டாளர்களின் சில குளறுபடிகள் காரணமாக விரும்பத்தகாத விடயங்கள் நடந்தேறியதாக அறியப்படுகிறது.
ஏற்கனவே  இந்த இசை நிகழ்ச்சி நடக்கக்கூடாது என்று  ஒரு கும்பல் சமூக ஊடகங்களில் செயல்பட்டதை பலரும் குறிப்பிடுகிறார்கள் .
தீவிர  தமிழ் வெறுப்பு  அரசியல்  கலாச்சார காவல் மேதாவிகள் எனப்படுவோர் சிலர் விஷம பிரசாரங்களை  மேற்கொண்டிருந்தார்கள்
எச்சரிக்கைகள் விட்டு கொண்டிருந்தார்கள்
சந்தர்ப்பத்தை பார்த்து கூட்டத்திற்குள்  புகுந்து குழப்பம் விளைவிக்கவே அவர்கள் காத்திருந்தனர்


ஆனால் யாழ் மக்கள் அந்த வெறுப்பு தமிழ் அரசியல்வாதிகள்  பக்கம் நிற்கவில்லை.
இதன் காரணமாக மேற்கொண்டு விபத்துக்கள் ஏதும் நிகழவில்லை என்று தெரிகிறது 

மேலும் இது பற்றி மேலும் அறிவதற்கு 1974 இல் நடந்த அம் மாநாடு பற்றி அறியவேண்டியது அவசியமாகும் .

1974 இல் தமிழாராய்ச்சி மாநாட்டில் நடந்த விபத்து பற்றிய சிறு குறிப்பு பின்வருமாறு :
இம்மாநாட்டு இலங்கையில் நடப்பதற்கு உலக தமிழாராய்ச்சி மன்றத்தால் தீர்மானிக்க பட்டது
அதை யாழ்ப்பாணத்தில் நடத்த வேண்டும் என்று விரும்பினார்கள்
அப்போது அங்கங்கே  இளைஞர்களின் போராட்ட நடவடிக்கைகள்   துளிர் விட்டு கொண்டிருந்த சூழ்நிலையில் அதை யாழ்ப்பாணத்தில் நடத்த  பிரதமர் ஸ்ரீ மாவோ அவர்கள் விரும்பவில்லை

 ஸ்ரீ மாவோ அம்மையாரின் நெருங்கிய நண்பரான திரு கோபாலுபிள்ளை மகாதேவா அவர்கள் தமிழரசு கட்சியினரின் வாக்குறுதியை நம்பி ஸ்ரீமாவிடம் தூது போனார்.
இம்மாநாடு ஒருபோதும் ஒரு அரசியல் மாநாடாக நடக்காது .முழுக்க முழுக்க தமிழ் மொழி பற்றிய ஆய்வு மாநாடாகவே நடக்கும் என்று ஸ்ரீமாவை நம்பவைத்தார்  

ஆனாலும் ஸ்ரீமா அம்மையார் அது ஒரு சர்வதேச மாநாடு என்பதால் கொழும்பு பண்டரநாயக மண்டபத்தில் செய்யலாம் அதற்கு அரசு முழு உதவியும் வழங்கும் என்று கூறினார் .
திரு மாகாதேவா அவர்களின் மீதுள்ள நம்பிக்கையால் யாழ்ப்பாணத்தில் மாநாடு நடப்பதற்கு அனுமதியை வழங்கினார்
திரு கோபாலுப்பிள்ளை மகாதேவாவையும் பிரதமர் ஸ்ரீமா அம்மையாரையும் ஏமாற்றி அனுமதியை பெற்ற  தமிழரசு கட்சி பிரமுகர்கள் அம்மாநாட்டை முழுக்க முழுக்க தமிழரசு கட்சியின் எழுச்சி மாநாடாக்குவதற்கு உரிய எல்லா வேலைகளையும் வேகமாக முடுக்கி விட்டனர்  

யாழ்ப்பாண தொகுதியில் அல்பிரட் துரையப்பாவை எப்படியாவது எதிர்காலத்தில் வெற்றி பெற விடக்கூடாது என்ற எண்ணத்தில் தமிழரசு கட்சியினர் அந்த மாநாட்டை ஒரு தமிழரசு கட்சி மாநாடு போல யாழ்ப்பாணத்தில் நடத்த வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டனர்.
அவர்களது  எண்ணம் நிறைவேறியது . தமிழ் மொழி ஆய்வுக்கு எந்த  வித சம்பந்தமும் இல்லாமல் வெறும் தமிழரசு கட்சி மாநாடு போல அது நடந்தது .
அங்கு யாழ்ப்பாண மேயராக இருந்த துரையப்பாவுக்கு அழைப்பு இல்லை .போலீசிடம் அனுமதியும் பெறவில்லை .
எல்லாவற்றையும் விட போலீசாரால் தேடப்பட்டு கொண்டிருந்த திரு ஜனார்த்தனன் அனுமதி இல்லாமல்  மாநாட்டில் பங்கு பற்றினார்
அவரை கைது செய்யும் நோக்கோடு அந்த மேடைக்கு முன் வீதியில் ஜீப்பில் வந்தனர்
ஜனார்தனனை போலீஸ் நெருங்குவதற்கு விடாமல் நெருக்கடியை உண்டாக்கியது இளைஞர்கள் கூட்டம்!

இந்த  சம்பவாம் போலீசாருக்கு  ஆத்திரம் ஊட்டியது. உண்மையில் இது ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனையையும் கூட.
மறு புறத்தில் இதன் மூலம்  தமிழ் தேசிய உணர்வை கட்டி எழுப்பும் திட்டத்தை தமிழரசு கட்சினர் கொண்டிருந்தனர் என்றே கருத வேண்டும்.     

இந்த மாநாட்டின் மூலம் ஏற்படப்போகும் எந்த விளைவுகளும் இலங்கை தமிழரசு கட்சிக்கே  சாதகமாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான் .
சட்டத்தை துளிகூட மதிக்காமல் நடக்கும் கூட்டத்தை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி போலீசார் சுட்டனர்
அதனால் மின்சார வயர் கம்பிகள் அறுந்து விழுந்தன.
அதில் மின்சாரம் பாய்ந்து 9 பேர் உயிரிழந்தனர்.
 

இந்த மின்சார விபத்தில் போலீசார் கூட உயிரிழக்க கூடிய வாய்ப்பு இருந்தது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் .
எனவே போலீசார்  இந்த விளைவை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்றே கருதவேண்டும். 
அந்த கால தமிழரசு மேடைகளில்  யார் யாரை எல்லாம் துரோகி என்று மேடைகளில் சுட்டி காட்டபடுமோ  அவர்களை நோக்கி இளைஞர்கள் பாய்வார்கள்!

அப்படி முதல் முதலில் முக்கியமாக சுட்டி காட்டி கொல்லப்பட்டவர்தான் அல்பிரட் துரையப்பா .
அரசியலில் அவரை எதிர்கொள்ள முடியாத தந்தை செல்வநாயகம் கட்சியினரின் ஸ்பான்சரில் பிரபாகரன் போன்றோர்  செய்த படு பாதக கொலை அது .

அந்த மாநாட்டை நடத்தியவர்களில் தமிழரின் சைவமும் தமிழும் நம்மிரு கண்கள் என்று காட்ட முன்னின்ற பிற்போக்குவாதிகளில் ஒரு முக்கிய நபர்தான் சச்சிதானந்தம் என்பவர் .
இவர்தான் தற்போது இலங்கை சிவசேனா தலைவராகும் .
அப்போது இவர் அப்போது எழுதிய நூலின் பெயர் "எனது யாழ்ப்பாணமே" என்பதாகும்

பஞ்சாபில் அகாலி தளத்தை ஒழித்து கட்ட காலிஸ்தான் பிந்தரன்வாலேக்கு இந்திர காந்தி ஆதரவு கொடுத்தது போலத்தான் அல்பிரட் துரையப்பாவை ஒழித்து கட்ட பிரபாகரன போன்றவர்களை வளர்த்து விட்டனர் தமிழரசு கட்சியினர் .
பின்பே அதே தமிழரசு கட்சியின் பல தலைவர்களை புலிகள் கொன்றொழித்தனர். ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக