ஞாயிறு, 14 ஜனவரி, 2024

PTR ஏன் நிதியமைச்சில் இருந்து மாற்றப்பட்டார்? விமலாதித்தன் மணி

 Vimalaadhithan Mani : அண்ணன் PTR போல நானும் வங்கி துறையில் பணியாற்றுபவன்தான். அதனால் அவர் விஷயத்தில் என்ன நடந்திருக்கும் என்று என்னால் தெளிவாக பார்க்க முடிகிறது.

1 - அவர் அரசின்  வருவாய் செலவீனங்களை நிர்வகிக்கும் நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்ததால் தமிழக அரசின் பல்வேறு அமைச்சகங்கள் அவர்களுக்கு  ஒதுக்கப்பட்ட நிதியை சரியாக கையாளாததால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை (Revenue Leak) புள்ளி விவரங்களுடன் கண்டுபிடித்தார் என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை.

2 - மேலும் தமிழ்நாடு அரசின் மனிதவள மேம்பாடு மற்றும் நிர்வாக சீர்த்திருத்தங்கள் துறையும் அவர் கீழ் இருந்ததால் தமிழக அரசின் பல அமைச்சங்கங்களின் செயல்பாடுகளில் இருந்த மிக பெரும் நிர்வாக சீர்கேடுகளை கண்டுபிடித்து அவற்றின் பொறுப்பு அமைச்சர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.


3 - அந்த நிர்வாக சீர்கேடுகள் களையப்படாமல் அந்த அமைச்சகங்களுக்கு நிதி ஒதுக்குவதில் கட்டுப்பாடுகளை விதித்தார்.

4 - இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட சக அமைச்சர்களுடன் எந்த ஒரு சமரசத்துக்கும் நேர்மையாளரான அவர் சம்மதிக்கவில்லை.

5 - இது அந்த பொறுப்பு அமைச்சர்களை கொலை வெறிக்கு உள்ளாக்கியது.

6 - காத்திருந்து தமிழக அரசுக்கு தன்னுடைய அபார அறிவுத்திறனால் நன்மை செய்ய வந்த அண்ணன் PTR அவர்களை நிதி துறையில் இருந்து தூக்கி அடிக்க வைத்தனர்.

இதுதான் திரை மறைவில் நடந்தத உண்மையான நிகழ்வுகள்.
அண்ணன் PTR இல்லாமல் தமிழக அரசின் நிதி மேலாண்மை பரிதாபத்துக்கு உரிய ஒன்றாகி மாறி விட்டது என்பதை அடுத்த பட்ஜெட்டிலேயே கட்சி தலைமை கண்டிப்பாக உணரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக