சனி, 27 ஜனவரி, 2024

தமிழ்ல பேசுவியா? காதை திருகிய ஆசிரியையால் சிறுவனின் காது அறுந்தது..! ராயபுரத்தில்

article_image2

tamil.asianetnews.com - vinoth kumar : சென்னையில் தனியார் பள்ளியில் வகுப்பறைக்குள் தமிழில் பேசியதால் 5ம் வகுப்பு மாணவனின் காதை பிடித்து ஆசிரியை திருகியதால் காது அறுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் ஜென்ஸ் பார்க் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த கேசவன். இவரது மகன் மனிஷ்(10). இவர் ராயபுரத்தில் உள்ள மான்போர்டு நர்சரி பிரைமரி தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 23ம் தேதி பள்ளி வகுப்பறையில் தமிழில் பேசியதால் பள்ளி ஆசிரியர் நாயகி அவரது காதை பிடித்துக் திருகியுள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவனின் தயார் ஆசிரியரை நாயகி மீது ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனிடையே மாணவனின் தாயார் தாக்கியதாக கூறி ஆசிரியை நாயகி அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக