வெள்ளி, 26 ஜனவரி, 2024

பீகார் ஆளுநர் - நிதிஷ்குமார் திடீர் சந்திப்பு- முதல்வர் பதவி ராஜினாமா?

tamil.oneindia.com - Mathivanan Maran : பாட்னா: பீகார் மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை முதல்வர் நிதிஷ்குமார் திடீரென சந்தித்து பேசி வருகிறார்.
இந்த சந்திப்பின் போது தற்போதைய ஆர்ஜேடி-ஜேடியூ-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் கடிதத்தை நிதிஷ்குமார், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் கொடுக்கக் கூடும் என தெரிகிறது.
இதனையடுத்து பாஜக ஆதரவுடன் நாளை மறுநாள் மீண்டும் புதிய ஆட்சியை அமைத்து முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்க கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக