hirunews.lk ; தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 40 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், நேற்று 40 பேரையும் இலங்கை அரசாங்கம் விடுவித்துள்ளது.
ஆனால், பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் இலங்கை வசமே உள்ளது. எனவே, படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மீனவர்களை மட்டும் விடுதலை செய்வதால் எந்த பலனும் இல்லை, படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக