சனி, 20 ஜனவரி, 2024

திமுக இளைஞரணி மாநாடு! 150 கிமீ தூரத்துக்கு 3,000 போஸ்டர்கள் ஒட்டிய அன்பில் மகேஸ்!

tamil.oneindia.com -  Arsath Kan : திருச்சி: திமுக இளைஞரணி மாநாட்டை ஒட்டி திருச்சியிலிருந்து சேலம் வரை வழிநெடுகிலும் 3,000 போஸ்டர்கள் ஒட்டி கவனம் ஈர்த்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஸ்.
மாநில உரிமை மீட்பு முழக்கத்தோடு சேலத்தில் நாளை நடைபெறும் திமுக இளைஞர் அணி மாநில மாநாட்டை ஒட்டி சேலம் புறநகர் பகுதி திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மாநாடு நடைபெறும் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தை நோக்கி இளைஞரணியினர் சாரை சாரையாக குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் அவ்வாறு மாநாடுக்கு வருபவர்களை வரவேற்கும் விதமாகவும், தனது நண்பரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முன்னின்று நடத்தும் மாநில மாநாடு என்பதாலும் திருச்சியிலிருந்து சேலம் வரை சுமார் 150 கிமீ தூரத்துக்கு 3,000 போஸ்டர்கள் ஒட்டி கவனம் ஈர்த்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஸ்.

அந்தளவுக்கு தனது நண்பர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை உற்சாகப்படுத்தவும், இளைஞரணி நிர்வாகிகளை வரவேற்கும் வண்ணமும் இதைச் செய்துள்ளார்.

முன்னதாக இன்று காலையே திருச்சியிலிருந்து சேலம் புறப்பட்டுச் சென்ற அமைச்சர் அன்பில் மகேஸ், மொத்த திடலிலும் ஒரு ரவுண்டு அடித்துவிட்டார். திமுக இளைஞரணி மாநாடுக்காக அமைக்கப்பட்டுள்ள குழுக்களை அழைத்து சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கிய அவர், தொடர்ந்து மாநாட்டுத் திடலிலேயே தங்கிவிட்டார்.

இதனிடையே திமுக இளைஞரணி மாநாட்டில் கலந்துகொள்பவர்களுக்கு திருச்சியை சேர்ந்த கே.எம்.எஸ். ஹக்கீம் பிரியாணி நிறுவனம் தான் உணவு சமைக்கிறது. 10 லட்சம் பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, பிரட் அல்வா, தயிர் சாதம், ஸ்வீட், காலி பிளவர் சில்லி என ஏராளமான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக