வெள்ளி, 19 ஜனவரி, 2024

குஜராத் படகு கவிழ்ந்து 14 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு,, பள்ளி சுற்றுலாவில் விபத்து

மாலை மலர் :  குஜராத் மாநிலம் வதோதரா நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஏரியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்து இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள் என மொத்தம் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்களும், 4 ஆசிரியர்களும் இன்று மதியம் அங்குள்ள ஹர்னி ஏரியில் படகு சவாரி செய்து கொண்டிருந்தனர். அப்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும், விபத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஹர்னி காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "இதுவரை, 14 குழந்தைகள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் இறந்துள்ளனர். மீட்கப்பட்ட ஒரு மாணவர், எஸ்எஸ்ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு குழு ஈடுபட்டுள்ளது" என்று தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக