செவ்வாய், 9 ஜனவரி, 2024

இலங்கையில் ஜல்லிக்கட்டு 1008 பொங்கல் பானைகள், 1500 பரதநாட்டிய கலைஞர்களுடன் முதல் முறையாக பொங்கல் திருவிழா

 கிரு நியூஸ் : இலங்கையில் முதல் முறையாக 1008 பொங்கல் பானைகள், 1500 பரதநாட்டிய கலைஞர்களுடன் பொங்கல் திருவிழா
கிழக்கு மாகாண ஆளுநரும் இ.தொ.கா தலைவருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானைகள், 1500 பரதநாட்டிய கலைஞர்கள், 500 கோலங்களுடன் பொங்கல் விழா இன்று (08) திருகோணமலையில் நடைபெற்றது.
பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இலங்கையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டியை கிழக்கு மாகாண ஆளுநர் நடத்தியிருந்ததுடன்,

இலங்கையில் தமிழ் மக்களின் பாரம்பரிய வீர விளையாட்டை மீட்டெடுத்தமைக்காக உலகம் முழுவதும் இருந்து செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், மற்றுமொரு சிறப்பம்சமாக பொங்கலை வரவேற்கும் விதத்தில் “பொங்கல் திருவிழா” தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக