கலைஞர் செய்திகள் : தேர்தல் ஆணைய மசோதாவை நிறைவேற்றக்கூடாது என மாநிலங்களவையில் திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த வாரத்திலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில் ஜம்மு - காஷ்மீர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா, ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா என பல்வேறு மசோதாக்களை ஒன்றிய அரசு நிறைவேற்றி வருகிறது.
இன்றைய கூட்டத் தொடரில் தேர்தல் ஆணையர் நியமனம் செய்வது தொடர்பான புதிய சட்டத்திருத்த மசோதாவை சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் தேர்தல் ஆணையர் நியமனம் மசோதா மீது மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது தி.மு.க சார்பில் திருச்சி சிவா பேசும்போது, "தேர்தல் என்பது 140 கோடி மக்களின் நம்பிக்கை. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டதாகத் தேர்தல் ஆணைய மசோதா இல்லை. இந்த மசோதா மூலம் பிரதமர் அல்லது ஒன்றிய அமைச்சர் முடிவு செய்பவரே தேர்தல் ஆணையராக நியமிக்கும் நிலை உள்ளது. எனவே இந்த மசோதாவை நிறைவேற்றக்கூடாது" என பேசினார்.
மேலும் 'அரசுக்கு வளைந்து கொடுக்கும் ஒரு முட்டாளோ ஒரு எடுபிடியோ தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுவதைத் தடுக்கும் சட்டப்பிரிவு இல்லையென்றால் அரசியல் சாசனத்தால் பயனே இல்லை' என்று டாக்டர் அம்பேத்கர் சொன்ன மேற்கோள்களை குறிப்பிட்டு திருச்சி சிவா பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக