ஞாயிறு, 3 டிசம்பர், 2023

தெலுங்கானாவில் காங்கிரஸ் - ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக- LIVE

மாலைமலர் :     நான்கு 4 மாநிலங்களில் கடந்த 30-ந்தேதி வரை பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.  தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் கடந்த 30-ந்தேதி வரை பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் கடந்த இரண்டு நாட்களாக செய்யப்பட்டது.இன்று காலை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்த வேட்பாளர்கள், கட்சி முகவர்கள் கடும் சோதனைக்குப்பின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. அதன்பின் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.


Live Updates

2 Dec 2023

    3 Dec 2023 4:32 AM

    4 மாநில தேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கரில் 3 மணி நிலவரப்படி பாஜக-54, காங்கிரஸ்- 33, மற்றவை-3 ஆகிய இடங்களில் முன்னிலை

    3 Dec 2023 4:32 AM

    4 மாநில தேர்தல் முடிவுகள்: ராஜஸ்தானில் 3 மணி நிலவரப்படி பாஜக-116, காங்கிரஸ்-68, மற்றவை-15 ஆகிய இடங்களில் முன்னிலை.

    3 Dec 2023 4:31 AM

    4 மாநில தேர்தல் முடிவுகள்: மத்திய பிரதேசத்தில் 3 மணி நிலவரப்படி பாஜக-160, காங்கிரஸ்- 68, மற்றவை-2 ஆகிய இடங்களில் முன்னிலை.

    3 Dec 2023 4:29 AM

    4 மாநில தேர்தல் முடிவுகள்: தெலுங்கானாவில் 3 மணி நிலவரப்படி காங்கிரஸ்- 64, பிஎஸ்ஆர் -40, பாஜக -7, மற்றவை-8 ஆகிய இடங்களில் முன்னிலை.

    3 Dec 2023 4:28 AM

    ஐதராபாத்தில் உள்ள தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி வீட்டுக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

        #WATCH | Security tightened outside Telangana Congress chief Revanth Reddy's residence in Hyderabad. pic.twitter.com/CHA2k0Slcn
        — ANI (@ANI) December 3, 2023

    3 Dec 2023 4:23 AM

    ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ள நிலையில், டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் பாஜக தலைவர்கள் ஸ்மிருதி இரானி, ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

        #WATCH | BJP leaders Smriti Irani, Ravi Shankar Prasad and Anil Baluni at the party headquarters in Delhi as BJP registers comfortable lead in Rajasthan, Chhattisgarh and Madhya Pradesh pic.twitter.com/Kf2ktYhymz
        — ANI (@ANI) December 3, 2023

    3 Dec 2023 4:09 AM

    தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றதை காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி மற்றும் கட்சித் தலைவர்கள் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் கொண்டாடினர்.

        #WATCH | Telangana Congress chief Revanth Reddy along with party leaders DK Shivakumar and others celebrates the party's lead in the state elections, in Hyderabad pic.twitter.com/jW0eRTSF4s
        — ANI (@ANI) December 3, 2023

    3 Dec 2023 3:59 AM

    கேசிஆர் மற்றும் கேடி ராமராவுக்கு மக்கள் பதில் அளித்துள்ளனர்.... தேர்தல் முடிவு குறித்து கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறினார்.

    3 Dec 2023 3:57 AM

    4 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், "நாட்டு மக்கள் தங்கள் மனநிலையை இந்த தேர்தல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளோம். எங்கள் திட்டங்களை மக்கள் ஆதரித்துள்ளனர். பிரதமர் மோடிக்கு நன்றி. கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா, கட்சித் தொண்டர்கள், மாநில மக்கள் அனைவருக்கும் நன்றி. இப்போது இரட்டை என்ஜின் ஆட்சி அமைக்கப்படுவதால் இங்கு வளர்ச்சி வேகமாக நடக்கும்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக