tamil.oneindia.com - Mani Singh S : இந்திய வானிலை மைய கணிப்பு தவறியுள்ளது.. பெருமழை பெய்யும் என கணிக்கவில்லை.. சிவ்தாஸ் மீனா
சென்னை: இந்திய வானிலை ஆய்வு மையம் பெரு மழை பெய்யும் என கணித்து கூறவில்லை என்றும், வானிலை ஆய்வு மையம் கணிப்பு சரியாக இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் சரியாக இருக்கும் என்றும் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறினார்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய 4 மாவட்டங்களில் பெருமழை பெய்தது. இதில் நெல்லை, தூத்துக்குடியில் பல இடங்களில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்பு குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு எப்படி நடக்கும்.. டெல்லி ஆலோசனைக்கு பின் போட்டு உடைத்த கார்கே இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு எப்படி நடக்கும்.. டெல்லி ஆலோசனைக்கு பின் போட்டு உடைத்த கார்கே
காயல்பட்டினத்தில் 30 மணி நேரத்தில் 116 செமீட்டர் மழை பெய்துள்ளது. 9 ஹெலிகாப்டர்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர்கள் மூலமாக உணவும் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 30 ஆயிரம் லிட்டர் பால் சப்ளை செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் பால் சப்ளை நார்மல் ஆகிவிடும். 323 படகுகள் மூலமாகவும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
தீவு போல மாறிய திருநெல்வேலி! | Oneindia Tamil
நெல்லை, தூத்துக்குடியில் நிறைய பகுதிகளில் மின் வினியோகம் இல்லை. மின்மாற்றிகள், மின்கம்பங்கள் பழுதாகியிருப்பதால் உடனடியாக மின்சாரம் வழங்க முடியவில்லை. உடனடியாக மின்சாரம் வழங்கினால் மழையினால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் பெரு மழை பெய்யும் என கணித்து கூறவில்லை. வானிலை ஆய்வு மையம் கணிப்பு சரியாக இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் சரியாக இருக்கும்.
பெருமழையால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். வீடு இடிந்து 3 பேர், மின்சாரம் தாக்கி 2 பேர் என மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் 27 மாடுகள், 297 ஆடுகள் ஆயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்துள்ளன. ஸ்ரீவைகுண்டத்தை சுற்றியுள்ள சாலைகள் அனைத்து சேதமடைந்துள்ளன. விமானப்படை, கடற்படை, கப்பல்படை மூலம் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக