ஞாயிறு, 3 டிசம்பர், 2023

பில் கேட்ஸ் - ஜனாதிபதி ரணில் சந்திப்பு!

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+-+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21

 hirunews.lk : பில் கேட்ஸ் - ஜனாதிபதி ரணில் சந்திப்பு!
உலகின் முன்னணி செல்வந்தர்களுள் ஒருவரும், மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நிறுவுனருமான பில் கேட்ஸுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
டுபாயில் உள்ள எக்ஸ்போ சிட்டியில் நடைபெறும் கொப் 28 எனப்படும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின்போது, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மூலம், விவசாய நவீனமயமாக்கல், தரவு அமைப்புகள் மற்றும் காலநிலை நிபுணத்துவம் ஆகியவற்றுக்கு தமது ஆதரவை வழங்குவதாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நிறுவுனர் பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக