வியாழன், 21 டிசம்பர், 2023

மல்லிகார்ஜுன கார்கே மீதுள்ள கோபத்தை டி ஆர் பாலுவிடம் காட்டிய நிதிஷ் குமார்

 tamil.samayam.com - மகேஷ் பாபு :  பிரசாந்த் கிஷோர் சொன்னது பலிச்சிடுச்சு... கிளைமேக்ஸ் நெருங்கிடுச்சு... நிதிஷ் குமார் அரசியல் ரூட் இனி என்ன ஆகும்?
தேர்தல் வியூக நிபுணராக ஐபேக் நிறுவனம் மூலம் அறியப்பட்ட பிரசாந்த் கிஷோர், தமிழ்நாடு முதல் பஞ்சாப் வரை பல்வேறு மாநிலங்களில் தேர்தல் வெற்றிக்காக வேலை செய்துள்ளார். கார்ப்பரேட் பாணியிலான இவரது வியூகத்தில் பாஜக, காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என அரசியல் கட்சிகளிடையே எந்தவித வேறுபாடும் கிடையாது. தற்போது ஐபேக்கிற்கு குட்பை சொல்லிவிட்டு தனது சொந்த மாநிலமான பிகாரில் அரசியல் புத்தெழுச்சி ஊட்டுவதற்காக வேலை செய்து கொண்டிருக்கிறார்.


பாஜக-விற்கு ஒரு பிரசாந்த் கிஷோர் காங்கிரஸிற்கு சுனில் கனுகோலு !
பிரசாந்த் கிஷோர் அரசியல்
இவரது ”ஜன் சூரஜ் யாத்ரா” என்ற நடைபயணம் பிகார் மக்களிடம் மிகவும் பிரபலம். எங்கு சென்றாலும் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் வச்சு செய்வதை மட்டும் நிறுத்துவதில்லை. ஒரு காலத்தில் ஐக்கிய ஜனதா தளத்தில் ஒன்றாக பயணம் செய்தவர்கள் தான். அதன்பிறகு பிரிந்து சென்று ஒருவரை ஒருவர் சரமாரியாக வசைபாடி கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் 2024 மக்களவை தேர்தலுக்காக பாஜகவிற்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணியில் நிதிஷ் குமார் முக்கியமான நபராக விளங்குகிறார்.

பிரசிடெண்ட், சுண்டு விரல் காயத்தை விடுங்க... இதயத் துடிப்பை சரி பண்ண பாருங்க... சு.வெங்கடேசன் பளீச் சம்பவம்!
ஐக்கிய ஜனதா தளம் பதிலடி

ஆனால் இவருக்கு சொந்த மாநிலத்திலேயே அரசியல் செய்ய தெரியாது. தேசிய அளவில் என்ன செய்யப் போகிறார். விரைவில் நிதிஷ் குமாரின் அரசியல் முடிவடையப் போகிறது. இவருக்கு எதிர்காலமே இல்லை என்றெல்லாம் பிரசாந்த் கிஷோர் வசைபாடினார். இதற்கு பதிலடி கொடுத்த ஐக்கிய ஜனதா தளக் கட்சியினர், எங்கள் தலைவர் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுவார். பிரதமர் முகமாக முன்னிறுத்தப்படுவார் என்றெல்லாம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர்.

இந்தியா கூட்டணி ஆலோசனை

ஆனால் டெல்லியில் நடந்த 4வது கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கேவை பல தலைவர்கள் கை காண்பித்தனர். அவர் பிரதமர் வேட்பாளராக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தங்கள் கருத்தை முன்வைத்தனர். இது நிதிஷ் தரப்பிற்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அதுமட்டுமின்றி இந்த கூட்டத்தில் இந்தியில் பேசிய போது, மொழி பெயர்த்து ஆங்கிலத்தில் பேசினால் நன்றாக இருக்கும் என்று திமுக கேட்டுக் கொண்டது.

அதற்கு கோபத்தில் பொரிந்து தள்ளி விட்டார். முதலில் தெற்கில் இருந்து வருபவர்கள் இந்தி கற்றுக் கொள்ளுங்கள் என வெடுக்கென்று பேசிவிட்டார். இதைக் கேட்டுக் கொண்டு திமுகவினர் அமைதி காத்தனர். எல்லாம் கூட்டணி சிதைத்து விடக் கூடாது என்ற எண்ணம் தானாம். இந்நிலையில் நிதிஷ் குமாரின் செயல்பாடுகள் பற்றி பேசிய பிரசாந்த் கிஷோர், நான் தான் அப்போதே சொன்னேன். இவருக்கு அரசியல் எதிர்காலமே கிடையாது.

சொன்னது நடந்தது

கிளைமேக்ஸ் நெருங்கி கொண்டிருக்கிறது. இந்தியா கூட்டணியில் எந்த பொறுப்பையும் அளிக்க மாட்டார்கள் என்றேன். அது நடந்து விட்டது. இவரால் இந்தியா கூட்டணிக்கு எந்தவித பலனும் ஏற்படாது என்று காட்டமாக பேசிவிட்டார். இதற்கு பதிலடி கொடுக்க ஐக்கிய ஜனதா தளக் கட்சியினர் நோட் தயாரித்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
மகேஷ் பாபு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக