சனி, 16 டிசம்பர், 2023

நாடாளுமன்றத்தில் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் லலித்! ! - போலீஸுக்கு நீதிமன்றம் விதித்த கெடு!

Delhi court sends Parliament attack accused Lalit Jha to 7-day police remand

nakkheeran.in : நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டது, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளை புதுச்சேரி மற்றும் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு நீட்டிப்பதற்கான மசோதாக்கள் மக்களவையில் கடந்த 12ம் தேதி நிறைவேற்றப்பட்டது, குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்றும் முடிவு வாபஸ் பெறப்பட்டது எனப் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.  


அதேபோல், நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான நேற்று (டிச. 13ம் தேதி) மீண்டும் நாடாளுமன்ற மக்களவையினுள் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது.

 கடந்த 13ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் திருமண கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் வண்ண புகையை உமிழும் பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து அவை முழுக்க வீசினர். மேலும், 'சர்வாதிகாரம் கூடாது' என அந்த இருவரும் முழக்கங்களை எழுப்பியபடி, அவைக்குள் தாவிக் குதித்து தப்பியோட முயன்றனர்.

அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த பாதுகாவலர்களும் அங்கிருந்த எம்.பி.க்களும் சுற்றி வளைத்து அந்த இரு நபர்களையும் பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நால்வரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், நாடாளுமன்றத்துக்கு உள்ளே வண்ணப் புகையை வீசி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மனோரஞ்சன் (34), சாகர் ஷர்மா (26) என்பதும் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீலம் (42) மற்றும் அமோல் ஷிண்டே(25) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட நான்கு பேரும் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நேற்று (14-12-23) ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அந்த 4 பேரையும் 15 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு அனுமதி கோரினர். ஆனால், கைது செய்யப்பட்ட நால்வருக்கு 7 நாள் போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கு முன்னதாக, கைது செய்யப்பட்ட நால்வரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர் லலித் ஜா என்பது தெரியவந்தது. இதனையடுத்து, தலைமறைவாகி இருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லலித் ஜாவை பிடிப்பதற்கு தொழில்நுட்ப உதவியுடன் டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவினர் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று (14-12-23) லலித் ஜா தானாகவே டெல்லி காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்தார். சரணடைந்த லலித் ஜாவை கைது செய்த காவல்துறையினர், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பிறகு லலித் ஜாவும் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை தரப்பில், “லலித் ஜா தான் இந்த சதி வேலைக்கு மூளையாக செயல்பட்டுள்ளார். லலித் ஜாவை பல்வேறு நகரங்களுக்கு அழைத்துச் சென்று விசாரிக்க வேண்டியுள்ளது. அதேபோல், அவரின் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களைக் கைப்பற்றி அதிலும் விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதன் காரணமாக இவரை விசாரிக்க எங்களுக்கு 15 நாட்கள் அவகாசம் வேண்டும்” என்று வாதிடப்பட்டது. டெல்லி காவல்துறையின் முறையீட்டை கேட்ட பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் லலித் ஜாவுக்கு 7 நாட்கள் காவல் விதித்து உத்தரவிட்டது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் அது வெடிக்க உள்ளதாக மர்ம நபர் ஒருவர் அவசர போலீஸ் 100 என்ற எண்ணிற்கு தகவல் அளித்துள்ளார். மேலும் விவரங்கள் எதுவும் கூறாமல் அழைப்பை துண்டித்ததால், சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து விழுப்புரம் நகர காவல்நிலையத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதே சமயம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சொன்ன மர்ம நபரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்த மர்ம நபர் அகரம்பாட்டை பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், நேற்று முன்தினம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச்சாலை பைபாஸ் பகுதியில் முத்தாம்பாளையம் சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த விமல்ராஜை போலீசார் மறித்து சோதனை நடத்தியுள்ளனர். வாகனத்தின் ஆவணங்களை போலீசார் கேட்க, வீட்டில் இருப்பதாக விமல்ராஜ் தெரிவித்துள்ளார். பின்னர் போலீசார், வீட்டில் இருக்கும் ஆவணங்களை எடுத்துவந்து காட்டிவிட்டு வாகனத்தை எடுத்து செல் சென்று கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த விமல்ராஜ் வீட்டிற்கு சென்று ஆவணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு போலீசார் மீது ஏற்பட்ட கோபத்தின் காரணமாக போலீசாரை அலைக்கழிக்க விட வேண்டும் என்ற எண்ணத்தில் தனது செல்போன் மூலம் அவசர போலீஸ் 100க்கு போன் செய்து விழுப்புரம் பஸ் ஸ்டாண்ட், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார் என்பது தெரியவந்தது.

உடனடியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விமல்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விழுப்புரம் நகரில் பரபரப்பான பஸ் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாகப் பரவிய தகவல் நகர மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டது, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளை புதுச்சேரி மற்றும் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு நீட்டிப்பதற்கான மசோதாக்கள் மக்களவையில் கடந்த 12ம் தேதி நிறைவேற்றப்பட்டது, குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்றும் முடிவு வாபஸ் பெறப்பட்டது எனப் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.  

அதேபோல், நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான கடந்த 13 ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்ற மக்களவையினுள் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது. கடந்த 13ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் வண்ண புகையை உமிழும் பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து அவை முழுக்க வீசி அவைக்குள் தாவிக் குதித்து தப்பியோட முயன்றனர்.

அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த பாதுகாவலர்களும் அங்கிருந்த எம்.பி.க்களும் சுற்றி வளைத்து அந்த இரு நபர்களையும் பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் வந்து, பாதுகாப்பு மீறல் குறித்து விளக்கம் தர வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், “பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கையால் இப்போது நாட்டில் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இந்த வேலையில்லாத் திண்டாட்டமே நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்பு மீறலுக்கு காரணம். இந்திய மக்கள் தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாக வேலையின்மை திண்டாட்டம் இருக்கிறது. மோடியின் கொள்கைகள் வேலையின்மை பிரச்சனைக்குத் தீர்வை தரவில்லை” என்று கூறினார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக