Thiru Nila Virumandi ; இரட்டைமலையார், அயோத்திதாசர் என்று தூங்கிக் கொண்டு வருபவர்கள் பெரியாருக்கு முன்னாடியே இவர்கள் புரட்சி செய்துவிட்டார்கள் என்றோ திராவிடம் இருட்டடிப்பு செய்துவிட்டது என்றோ அழுவார்கள்.
அதற்கு முதன்மைய காரணம் தாழ்வு மனப்பான்மை. தமிழ்நாடே பெரியாரைத் தூக்கிக் கொண்டாடுகிறதே, எந்த வேற்றுமையும், சாதி மதப் பிரிவும் அதற்குத் தடையாக இல்லையே என்ற பொறாமை. தொன்னூறுகளுக்குப் பிறகான தன் சாதி அடையாள அரசியல் போக்கில் தலைவர்களும் தன் சாதியில் இருந்துதான் வர வேண்டும் என்ற தேவையில் இருந்து இப்படி ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது.
இந்த இடத்தில் தான் சில அறிவுக்குடி அறிஞர்களின் அருமையான தேவை ஏற்படுகிறது. கருப்பு வெள்ளையாக தெளிவுபட்டு அறியப்பட்ட வரலாற்றை இந்த அரிப்பாளர்கள் நோண்டி நோண்டி தங்கள் சாதிக்கு சேர்த்தியான துண்டு துக்கடாக்களை கவ்வி வந்து வாந்தி எடுத்து அதை பின் நவீனத்துவ வண்ண ஓவியமாக வரைந்து வைத்தனர்.
வரலாற்றைத் தொகுப்பாகப் பார்க்க வேண்டும் என்பது ஒரு தேவை எனில் அதை எந்த நோக்கத்துக்காக பார்க்கிறோம் என்பது அதை விட பார்க்க வேண்டியது.
தனக்கு வாய்க்காத தகுதி, திறமை, உயர்வு தன் சாதியால் கிடைத்து விடுவதாக உணர முடிகிறதும் / வேறு வழியில்லாததுமான சமூகச் சூழல் தான் இப்படி தன் சாதிக்குள்ளேயே ஆளுமை தேடும் தாழ்வு மனப்பான்மைக்குக் காரணம்.
பெரியாரின் இயக்கம் தொய்வடைந்திருக்கலாம். பெரியாருக்குப் பிறகு அவரைப் போல் உறுதியுடனும், சூழ்நிலை சார்ந்த தெளிவுடனும், அயராத உழைப்புடனும் இயங்கக் கூடிய தலைவர்களின் போதாமை இருக்கலாம். அல்லது இப்படியெல்லாம் தோன்றும் படியான சமூக பொருளாதார மாற்றம் ஏற்பட்டு, அதன் காரணமாக நம் எதிரிகள் கூடுதல் வலிமை வலிமை பெற்றிருக்கலாம். இவற்றில் என்ன நடந்துள்ளது என்று கண்டறிவது பெரிய விஷயமில்லை. ஆனால் அப்படி எதையேனும் சொல்லப் போய் அது காரணமில்லை இது தான் காரணம் என்று மாற்றுக் கருத்து வரும் என்பதால் அதன் முடிவை உங்களிடமே விட்டு விடுகிறேன்.
இதில் எது நடந்திருந்தாலும் நடந்திருக்காவிட்டாலும் நடக்கவிருந்தாலும், தொகுப்பாகப் பெரியாரைப் பார்த்தால் அவர் பெரியார் தான்.
இந்த மாதிரி ஒரு காழ்ப்புணர்ச்சி கொண்ட படம் பகிரப்படும் இந்த சூழலைப் பயன்படுத்தி ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
பெரியார் காலத்தால் பின்னாளில் வாழ்ந்தவராக இருக்கலாம். ஆனால், அவர் தமிழ்நாட்டின் பிற தலைவர்கள் எல்லோரும் படித்த ஸ்கூலில் ஹெட்மாஸ்டர் தான். வேறு யாரும் கிட்ட நெருங்க முடியாதளவு உயர்ந்த இமையம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக