திங்கள், 25 டிசம்பர், 2023

வடிவேலுவை படையெடுக்கும் மாமன்னன் பாணி கண்ணீர் கதைகள் .. கதைகளை கேட்டு கதறும் வடிவேலு

tamil.filmibeat.com -  Abdul Rahman Peer Mohamed :  ஒரேயொரு மாமன்னன் பண்ணேன்... எல்லாமே சோகமா போய்டுச்சு..” அழுகையை கன்ட்ரோல் செய்த வடிவேலு!
சென்னை: வைகைப்புயல் வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து மாமன்னன் படத்தில் ரொம்பவே சீரியஸ்ஸான கேரக்டரில் நடித்து ரசிகர்களை கண் கலங்க வைத்தார்.
இந்நிலையில், மாமன்னன் படத்தில் நடித்ததால் எல்லாமே சோகமாகிவிட்டதாக வடிவேலு மனம் திறந்துள்ளார்.
மாமன்னன் படத்தால் சோகமாகிவிட்டது
தமிழ்த் திரையுலகில் வடிவேலுவின் காமெடிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மற்ற காமெடி நடிகர்களிடம் இருந்து தனித்து காணப்பட்டார் வடிவேலு. அவரது உடல் மொழியும் தன்னைத் தானே கலாய்த்துக்கொண்டு அடி வாங்குவதும் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தது. அதுமட்டும் இல்லாமல் வடிவேலுவின் மதுரை வட்டார வழக்கும் ரசிகர்களை அசரடிக்கும்.

இப்படி முழுக்க முழுக்க காமெடியனாக மட்டுமே நடித்து வந்தார் வடிவேலு. ஒருகட்டத்தில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியதும் பிரச்சினையும் தலைக்கு மேலே வந்தது. இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் கமிட்டாகிய வடிவேலு, அதன் படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்சினையால் ரெட் கார்டு வாங்கி நடிக்க முடியாமல் வீட்டிலேயே முடங்கினார். சில வருடங்களாக வீட்டிலேயே இருந்த வடிவேலு, கடந்தாண்டு முதல் மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.

அதன்படி, லைகா தயாரித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலு ஹீரோவாக நடித்தார். ஆனால், இந்தப் படம் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கிவிட்டு படு தோல்வியடைந்தது. இதனால் வடிவேலுவின் மார்க்கெட் கேள்விக்குறியான போது தான் மாமன்னன் படத்தில் நடித்தார். மாரி செல்வராஜ் இயக்கிய இந்தப் படத்தில் உதயநிதி ஹீரோவாக நடித்தார். ஆனால், கதையின் நாயகனாக வடிவேலு தான் முன்னிருத்தப்பட்டார்.

முக்கியமாக வடிவேலுவின் கேரக்டரின் பெயரையே 'மாமன்னன்' என படத்தின் டைட்டிலாக வைத்திருந்தார் மாரி செல்வராஜ். அதேபோல், எப்போதும் காமெடியனாக நடிக்கும் வடிவேலு, இந்தப் படத்தில் ரொம்பவே சீரியஸ்ஸான ரோல் செய்திருந்தார். அதுமட்டும் இல்லாமல் ஏஆர் ரஹ்மான் இசையில் 'ராசா கண்ணு' என்ற பாடலையும் பாடியிருந்தார். இந்தப் பாடல் உட்பட மாமன்னன் படமும் புதியதொரு வடிவேலுவை ரசிகர்களிடம் அடையாளம் காட்டியது.

Actor Vadivelu: மாமன்னன் படத்துக்கு அப்புறம் ஒரே சோகம்தான்.. வடிவேலு சொன்ன உண்மை! Actor Vadivelu: மாமன்னன் படத்துக்கு அப்புறம் ஒரே சோகம்தான்.. வடிவேலு சொன்ன உண்மை!

இந்நிலையில், மாமன்னன் படத்தில் நடித்ததற்காக சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது வடிவேலுவுக்கு வழங்கப்பட்டது. அப்போது பேசிய வடிவேலு மாமன்னன் படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இந்தப் படத்தில் நடித்த பின்னர் எல்லா இயக்குநர்களும் சோகமான கதைகளுடன் தான் ஆபிஸ் வருகின்றனர். அதிலும் 67 வயதில் இயக்குநராகும் ஆசையில் ஒரு கதையை சொல்ல வர நேரம் கேட்கிறார் என்பதை, காமெடியாக சொல்லி கலாய்த்தார்.

மேலும், ஒரோயெரு மாமன்னன் படத்தில் நடித்ததற்கு... இப்போ எல்லாமே சோகமா போய்டுச்சு. எல்லாமே மாமன்னன் மாதிரியான சோகமான கதைகளை சொல்லி கால்ஷீட் கேட்கின்றனர். சில நேரங்களில் அவர்கள் சொல்லும் கதையை கேட்டு தனியாக உட்கார்ந்து அழுதுக் கொண்டிருக்கிறேன் என தனக்கே உரிய பாணியில் காமெடியாக சொல்லி அதகளப்படுத்தியுள்ளார். இந்த வீடியோவை வடிவேலு ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக