Vimalaadhithan Mani : இந்த ஜெயதி கோஷ் எழுதி இருக்கும் A Quantum Leap In The Wrong Direction என்ற புத்தகத்தை சில காலம் முன் படித்தேன் .
10 ஆண்டு கால நடுவண் அரசின் அருமையான செயல்பாடுகள் என்று சங்கிகளால் பில்டப் செய்யப்பட்டு இருக்கும் அத்தனை பர்னிச்சர்களையும் பீஸ் பீஸாக புள்ளி விவரத்துடன் போட்டு உடைத்து சம்பவம் செய்து இருக்கிறார் .
அப்படிப்பட்ட ஒரு பிரபல பொருளாதார மேதைதான் A Quantum Leap In The Wrong Direction என்ற அவரு9டைய ஆராய்ச்சி புத்தகத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு தமிழ்நாட்டுக்கு புகழாரம் சூட்டி இருக்கிறார்!
அதே போல இந்தியாவில் பிறந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமார்த்யா சென் அவர்கள் மற்றொரு பொருளாதார மேதை ஜான் ட்ரெஸ் (John Dreze) அவர்களுடன் இணைந்து எழுதி இருக்கும் அவருடைய "An Uncertain Glory: India and its Contradictions" என்னும் புத்தகத்தில் தமிழ்நாடு எப்படி சமூக நீதி, கல்வி, பொது சுகாதாரம் போன்றவற்றில் உலக நாடுகளுக்கு இணையாக வளர்ந்து இந்தியாவுக்கே வழிகாட்டும் ஒரு மாநிலமாக திகழ்கிறது என்று புள்ளி விவரங்களுடன் விளக்கி இருப்பார்.
இப்படி உலக நாடுகளுக்கு இணையாக வளர்ச்சியில் தமிழகம் போட்டி போட ஒரே காரணம் 50 வருடங்களாக பெரியாரிய திராவிட சித்தாந்தங்களால் புடம் போடப்பட்ட திராவிட கழக அரசுகள் தமிழ்நாட்டில் கொடுத்த நல்ல ஆட்சியே.
அதுவும் முக்கால்வாசி வளர்ச்சி திட்டங்கள் கலைஞர் ஆட்சியில் இருக்கும்போதுதான் கொண்டு வரப்பட்டன என்பது வரலாற்று புள்ளி விவரங்கள் நமக்கு ஆதாரபூர்வமாக சொல்லும் உண்மை .
இந்த புள்ளிவிவரங்கள் சொல்லும் நாம் எப்படிப்பட்ட ஒரு பாதுகாப்பான மக்கள் நலம் பேணும் ஆட்சியின் கீழ் இருக்கிறோம் என்று . இந்தியாவுக்கே வழிகாட்டும் ஒரு மாநிலமாக நம் தங்க தமிழகம் இருப்பதில் தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் காலரை தூக்கி விட்டு கொள்ள வேண்டும்.
கொசுறு தகவல் :
அமார்த்யா சென்னுடன் இணைந்து An Uncertain Glory: India and its Contradictions புத்தகத்தை எழுதிய பொருளாதார மேதை ஜான் ட்ரெஸ் (John Dreze) அவர்கள் தற்போது தமிழக அரசின் நிதி மேலாண்மைக்கான அறிவுரை கூறும் பொருளாதார வல்லுநர்கள் குழுவில் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன் போன்ற மற்ற பெயர் பெற்ற பொருளாதார வல்லுனர்களுடன் இடம் பிடித்து இருக்கிறார்.
இது போன்ற பொருளாதார வல்லுனர்களின் அறிவுரைகள் படி வழி நடத்தப்படும் ஒரே மாநிலம் இந்தியாவில் நம் தங்க தமிழகம் மட்டுமே. மத்தியில் ஆளும் நடுவண் அரசிடம் கூட இப்படிப்பட்ட ஒரு அறிவார்ந்த பொருளாதார சிந்தனை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக