திங்கள், 11 டிசம்பர், 2023

காங்கிரஸின் மாநிலங்களவை ஒடிஷா காங்கிரஸ் எம்.பி.தீரஜ் சாகு வீட்டில் 300 கோடி வரி ஏய்ப்பு

tamil.goodreturns.in - : காங்கிரஸின் மாநிலங்களவை எம்.பி.யாக இருப்பவர் தீரஜ் சாகு. வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளின் பேரில் வருமான வரித்துறையினர் கடந்த 6ம் தேதி முதல் இவரது வீடுகள் மற்றும் ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள அவரது பௌத் டிஸ்டில்லி பிரைவேட் லிமிடெட் நிறுவன வளாகங்களில் சோதனை நடத்தினர்.
கடந்த 4 தினங்களாக நடைபெற்ற இந்த சோதனையின் போது வருமான வரித்துறையினர் சுமார் ரூ.300 கோடியை ரொக்கமாக கைப்பற்றினர். இது, ஒரே நடவடிக்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு கைப்பற்றப்பட்ட பெரிய தொகை என்று வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.
காங்கிரஸ் எம்பி வீட்டில் வருமான வரி ரெய்டு.. சிக்கிய பணத்தை எண்ணி முடிக்கவே இன்னும் 2 நாள் ஆகுமா..!


பணம் தவிர, நகைகள் அடங்கிய மூன்று பேக்குகளும் வருமான வரித்துறையிடம் சிக்கியது. ஒடிசாவில் உள்ள மிகப்பெரிய நாட்டின் மது உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான பல்டியோ சாகு & குரூப் ஆஃப் கம்பெனிகளில் இதுவரை 30 அலமாரிகள் கைப்பற்றப்பட்டன. இதில் 9 அலமாரிகள் 100,200,500 ரூபாய் நோட்டு பண்டல்களால் நிரப்பப்பட்டு இருந்ததாக வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ரெய்டில் சிக்கிய பணத்தை எண்ண முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர்.

இதுவரை ரூ.290 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் எண்ணப்பட்டுள்ளன. கைப்பற்ற பணத்தை எண்ணுவதற்காக சுமார் 6 பணம் எண்ணும் எந்திரங்களை வருமான வரித்துறை கொண்டு வந்தது. ஆனால் கைப்பற்ற பணம் பெரிய தொகை என்பதால் பணம் எண்ணுவதற்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து எந்திரங்களும் செயலிழந்து விட்டன. இதனையடுத்து பணத்தை எண்ணுவதற்கு அதிக எந்திரங்களை வருமான வரித்துறை கொண்டு வந்துள்ளது.

வருமான வரித்துறை இயக்குனர் ஜெனரல் சஞ்சய் பகதூர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கைப்பற்றப்பட்ட பணத்தின் அளவை பார்த்தால், அவற்றை எண்ணுவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் ஆகும். அதன் பிறகுதான் கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல்களை துறை பகிர முடியும் என்று தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், வங்கி பணியாளர்களை தவிர வேறு யாரும் தங்கள் வாழ்நாளில் இவ்வளவு பணக்குவியலை பார்த்திருக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

அதேசமயம், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், தீரஜ் சாஹூ எம்.பி.யின் வணிகங்களுடன் காங்கிரஸூக்கு எந்த தொடர்பும் இல்லை. எப்படி பெரிய அளவிலான பணம் கண்டுபிடிக்கப்பட்டது என்பதை அவரால் மட்டுமே விளக்க முடியும் மற்றும் விளக்க வேண்டும் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக