செவ்வாய், 12 டிசம்பர், 2023

30 லட்சம் குடும்பத்தினருக்கு மழை நிவாரணத் தொகை

மின்னம்பலம் - Monisha : மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சுமார் 25 முதல் 30 லட்சம் குடும்பத்தினர் நிவாரணத் தொகையை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 25 to 30 lakh families get rain relief fund
மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்க்கை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிவாரணத் தொகையானது குடும்ப அட்டை அடிப்படையில் வழங்கப்படும் என்றும், இதற்காக டோக்கன் விநியோகிக்கப்பட்ட பின்னர் மக்கள் நியாய விலை கடைகளில் நிவாரணத் தொகையை ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சுமார் 25 முதல் 30 லட்சம் பேர் தமிழக அரசின் நிவாரணத் தொகையை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அதிகபட்சமாக சென்னையில் சுமார் 17 லட்சம் முதல் 18 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படும் என்று தெரிகிறது. ஆனால் அண்டை மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்படாத தாலுக்காக்களுக்கு நிவாரணம் வழங்கப்படாது. பாதிக்கப்பட்ட பகுதிகளை அறிவிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்க சுமார் 1,500 கோடி ரூபாய் செலவாகும். எந்தெந்த பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு இன்று (டிசம்பர் 11) விரிவான அறிக்கை வெளியிட உள்ளது.

இதனிடையே நிவாரணத் தொகையை வங்கிக்கணக்கில் செலுத்தாமல் ரொக்கமாக கொடுக்கப்படுவது ஏன் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு, “மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கும் போது, 15 முதல் 20 சதவீதம் விண்ணப்பதாரர்கள் பல குடும்ப அட்டைகளில் ஒரே வங்கி கணக்கை குறிப்பிட்டிருந்தனர்.

எனவே விரைவாக நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்பதால் விவரங்களை சரிபார்ப்பதற்கு நேரமில்லை. அதனால் வங்கி கணக்கில் செலுத்தாமல் ரொக்கமாக வழங்கப்படுகிறது. மேலும் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்தவர்களில் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் அவர்களுக்கும் நிவாரணத் தொகையை அரசு வழங்கும்” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு நிவாரணத் தொகை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளச்சேரியில் வசித்து வரும் தொழிலாளி ஈஸ்வரி தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “எனது ரேஷன் கார்டு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள நியாய விலைக் கடையில் இணைக்கப்பட்டுள்ளது. அங்கு எனது கணவர் மகனுடன் வசித்து வருகிறார். 2015 டிசம்பர் வெள்ளத்திற்குப் பிறகு, வேளச்சேரியில் எனது முகவரியைக் கொண்ட வங்கி புத்தகத்தின் நகலை அதிகாரிகளிடம் வழங்கினேன். அப்போது எனக்கு நிவாரணத் தொகை கிடைத்தது.

ஆனால் இந்த முறை எனது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும் எனக்கு நிவாரணத் தொகை கிடைக்காது” என்று தெரிவித்துள்ளார். எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு நிவாரணத் தொகை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை வைக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக