சனி, 2 டிசம்பர், 2023

20 லட்சம் லஞ்சம் வாங்கி சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி.. கிண்டல் செய்து பறக்கும் மீம்ஸ்கள்

tamil.oneindia.com - Mani Singh S : சென்னை: திண்டுக்கல்லில் அரசு மருத்துவரை  மிரட்டி லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ள நிலையில், Corrupted_ED என்ற டேக் இணையத்தில் டிரெண்ட் ஆகிறது. திமுக ஆதரவாளர்கள் அமலாக்கத்துறையை கலாய்த்து மீம்களை தெறிக்கவிடுகிறார்கள்.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் டாக்டர் சுரேஷ் பாபு மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் இருந்து டாக்டர் சுரேஷ் பாபுவை விடுதலை செய்ய ரூ3 கோடி லஞ்சம் வேண்டும் என்று அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கேட்டுள்ளார். இதில் முதல் கட்டமாக ரூ20 லட்சம் தர டாக்டர் சுரேஷ் பாபு ஒப்புக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
ED officer arrested DVAC by for bribery Charges, DMK supporters shares memes in Social Media

இதன்படி, கடந்த மாதம் ரூ20 லட்சம் பெற்றுக் கொண்ட அங்கித் திவாரி, மேலும் ரூ31 லட்சம் தந்தாக வேண்டும் என டாக்டர் சுரேஷ் பாபுவை அங்கித் திவாரி மிரட்டி இருக்கிறார். இதனால் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் டாக்டர் சுரேஷ் பாபு புகார் கொடுத்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கையும் களவுமாக பிடித்துள்ளது. அங்கித்திவாரியிடம் பல மணி நேரமாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் டாக்டரிடம் ரூ20 லட்சம் லஞ்சம்- தப்ப முயன்ற அமலாக்கத்துறை அதிகாரி விரட்டி பிடித்து கைது!திண்டுக்கல் டாக்டரிடம் ரூ20 லட்சம் லஞ்சம்- தப்ப முயன்ற அமலாக்கத்துறை அதிகாரி விரட்டி பிடித்து கைது!

கலாய்த்து மீம்ஸ்: இதனிடையே, மதுரை தபால் தந்தி நகரில் உள்ள அமலாக்க்த்துறை மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளத்திலும்
#Corrupted_ED என்ற ஹேஷ் டேக் ட்ரெண்ட்டாகி வருகிறது. திமுக ஆதரவாளர்கள் மீம்களை தெறிவிக்கவிட்டுள்ளனர்.

அந்த வகையில், பிரபு படம் ஒன்றில், அடிபட்டு கிடக்கும் வடிவேலு கதாப்பாத்திரத்தை கேலி செய்து விட்டு செல்லும் விவேக், கீழே விழுந்து அவரும் முகத்தில் காயத்துடன் விழுந்து கிடப்பார். அப்போது, பேச்சாட பேசுனீங்க மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரைனு அடிச்சு பொழந்து விட்டாங்களா தமிழ்நாட்டு" டயலாக்குடன் அமலாக்கத்துறையை கேலி செய்து மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இதேபோல், சிங்கம் 2 படத்தில் வில்லன் டேனியை போலீசான சூர்யா, சட்டையை பிடித்து வரும் படத்தை பகிர்ந்து "TN Police to ED: ஊழலை ஒழிக்க சொன்னா லஞ்சமா வாங்கிட்டு இருக்க வாடா" என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல், வீட்டிற்கு திருடசென்று விட்டு, வீட்டு உரிமையாளராக இருக்கும் பயில்வான் ரங்கநாதன் வந்தவுடன் சோதனை நடத்த வந்த அதிகாரி போல வடிவேலு, போனில் யாரிடமோ பேசுவது போல பேசுவார். இந்தக் காட்சி அடங்கிய மீம்ஸ்களை திமுக ஆதரவாளர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அதேபோல், கிங்காங் மணி எனக்கு கல்யாணம் ஆகிட்டு என வடிவேலுவிடம் சொன்னதும் அதிர்ச்சி ஆவார். இதை அப்படியே மீம்ஸ் ஆக்கி, 20 லட்சம் லஞ்சம் வாங்கினவரை கைது பண்ணிட்டாங்கண்ணே.. யாரு அமலாக்கத்துறை தானே.. இல்லை லஞ்சம் வாங்கியதே அமலாக்கத்துறை என பதிவிட்ட ஒரு மீம்ஸும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

கட்டுகட்டாக பணத்துடன் மாட்டிக்கொண்ட ஒருவர் காட்சியை பகிர்ந்து, ' 20 லட்சம் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட பிரதமர் மோடியின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறை அதிகாரி" என என்ற மீம்ஸ் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

English summary
As the Anti-Corruption Department police have arrested an enforcement officer who threatened a government doctor in Dindigul and took bribe, the tag Corrupted_ED is trending on the internet. DMK supporters thrash the enforcement department and splash memes.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக