வெனிசுலாவுடன் இந்நாட்டுக்கு பல நூற்றாண்டுகளாகப் பழமையான தகராறு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இங்கு இருப்பவர்களில் 10-ல் 4 பேர் எப்படி இந்தியர்களாக உள்ளனர் என்ற கேள்வி பெரும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. இந்நாட்டில் உள்ளவர்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாட்டவர்களாக உள்ளனர். நாட்டின் முழுப் பகுதியும் பிரிட்டிஷ் காலனியாக இருந்தபோது எப்படி இந்த எண்ணிக்கையில் இந்தியர்கள் அங்கு சென்றனர்?
இப்படிப் புலம்பெயர்ந்து வந்தவர்களில் நாட்டின் அதிபர் இர்ஃபான் அலியும் ஒருவர். கயானாவின் முதல் முஸ்லிம் அதிபர் அலி ஆவார்.
அமெரிக்க வெளியுறவுத் துறையின் கூற்றின்படி, மீதமுள்ள கயானியர்கள் ஆப்பிரிக்க (30%), கலப்பு இனம் (17%) மற்றும் அமெரிண்டியன் (9%) வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.
ஆனால் தென் அமெரிக்காவில் உள்ள ஒரு சிறிய நாடு, சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள, தோராயமாக ஆந்திர பிரதேசத்தின் அதே அளவுள்ள இந்நாட்டில், பூமியின் மறுபக்கத்தில் உள்ள வேறொரு தேசத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் வாழ வந்தது எப்படி?
சர்க்கரை ஆலையில் வேலை செய்ய கொண்டு செல்லப்பட்ட இந்தியர்கள்
நெப்போலிய போர்கள் 1814 ஆம் ஆண்டில் நடந்துகொண்டிருந்த போது ஐக்கிய ராஜ்ஜியம் கயானாவை ஆக்கிரமித்தது. பின்னர் அந்நாடு பிரிட்டிஷ் கயானாவின் காலனியாக மாற்றப்பட்டது. முன்னதாக, இன்றைய கயானாவின் பிரதேசம் முழுவதும் பிரெஞ்சு மற்றும் டச்சுக்காரர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது.
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, 1834இல், உலகெங்கிலும் உள்ள பிற பிரிட்டிஷ் உடைமைகளில் நடந்தது போலவே, ஆப்பிரிக்கர்களின் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டது. இந்திய குடியேற்றவாசிகளின் வருகையைத் தொடர்ந்து கயானாவில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டது.
தொழிலாளர்களுக்கான தேவை இந்தியாவில் இருந்து தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்டதன் மூலம் சரிசெய்யப்பட்டது. இந்த இடப்பெயர்வு நிகழ்வு, கயானாவில் அதிகமாக இருந்தாலும், ஜமைக்கா, டிரினிடாட், கென்யா மற்றும் உகாண்டா போன்ற பிற பிரிட்டிஷ் காலனிகளிலும் நிகழ்ந்தது.
இந்தியாவில் இருந்து முதலில் குடியேறியவர்களின் எண்ணிக்கை மொத்தம் 396. பிரிட்டிஷ் கயானாவில் உள்ள ஒரு சர்க்கரைத் தோட்டத்தின் உரிமையாளரும் மேற்கிந்தியத் தீவுகள் சங்கத்தின் பிரதிநிதியுமான ஜான் கிளாட்ஸ்டோனை குறிப்பிடும் வகையில், "கிளாட்ஸ்டோன் கூலிஸ்" என்று பிரபலமாக அவர்கள் அறியப்பட்டனர்.
"கூலி" என்பது 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆசியா, குறிப்பாக சீனா மற்றும் இந்தியாவை சேர்ந்த உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கு வரலாற்று ரீதியாகப் பயன்படுத்தப்படும் பெயர்ச் சொல்.
இங்கு குடியேறியவர்கள் ஆரம்பத்தில் எம்.வி. விட்பி மற்றும் எம்.வி. ஹெஸ்பெரஸ் என்ற இரண்டு கப்பல்களில் வந்தனர்.
அடிமைத்தனத்தின் நினைவூட்டல்
இந்தியப் பெருங்கடலையும், அட்லாண்டிக் பெருங்கடலையும் கடந்து இந்தக் குழு கயானாவுக்கு சென்றது. கூலித் தொழிலாளர்களாக, அவர்கள் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதில் அவர்கள் ஒரு சிறிய தொகைக்கு ஈடாக பல ஆண்டுகள் வயல்களில் வேலை செய்ய ஒப்புக்கொண்டனர்.
இந்த முறை 75 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்தது என்பதுடன் கயானா கல்வி அமைச்சகத்தின்படி, "அடிமைத்தனத்தை மிகவும் நினைவூட்டும்" பண்புகளைக் கொண்டிருந்தது.
பத்தாண்டு கால இடைவெளியில், பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரமான சர்க்கரைத் தொழிலில் "புரட்சியை" ஏற்படுத்துவதற்கு இந்திய குடியேற்றம் பெரிதும் காரணமாக இருந்தது. அது உயிர்வாழ்வையும் செழிப்பையும் அந்நாட்டுக்குக் கொடுத்தது.
ஒப்பந்தத்தின் முடிவில், சிலர் இந்தியாவுக்குத் திரும்பினர். பெரும்பாலானவர்கள் அங்கேயே தங்கி அப்போதைய பிரிட்டிஷ் கயானாவில் குடியேறினர்.
1838 மற்றும் 1917க்கு இடையில், 2 லட்சத்து 38 ஆயிரத்து 909 இந்தியர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக சுமார் 500 கப்பல்களில் பிரிட்டிஷ் கயானாவுக்கு அழைத்து வரப்பட்டதாகப் பதிவுகள் குறிப்பிடுகின்றன.
ஆங்கிலம் பேசும் காலனிகளில், பிரிட்டிஷ் கயானா இந்தியாவில் இருந்து ஒப்பந்தம் செய்யப்பட்ட தொழிலாளர்களை அழைத்து வந்தது. இன்று வரை, கயானாவில் முதல்முறையாக இந்தியர்கள் வந்த மே 5ஆம் தேதியை தேசிய விடுமுறையாக அந்நாடு கொண்டாடுகிறது.
ஐக்கிய இராஜ்ஜியத்திடம் இருந்து கயானா 1966இல் சுதந்திரம் பெற்றது. கயானிய நாட்காட்டியில் தீபாவளி மற்றும் ஹோலி போன்ற பிற நன்கு அறியப்பட்ட இந்திய பண்டிகைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக