வெள்ளி, 29 டிசம்பர், 2023

1 ஸ்பூன் வெந்தயத்தை இப்படி சாப்பிட்டா போதும்! யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த வெந்தயம்..

 zeenews.india.com - Malathi Tamilselvan : யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த வெந்தயம்: உணவுகளே, நமது உடலில் சத்தை கூட்டவும், குறைக்கவும் காரணம் என்பதுபோலவே, நாம் உண்ணும் உணவும், அதில் பயன்படுத்தப்படும் பொருட்களும் உடலின் கழிவான யூரிக் அமிலத்தின் சுரப்பை நிர்ணயிக்கிறது.
யூரிக் அமிலம் என்பது பூயூரின் என்ற வேதிப்பொருளினால் உருவாகிறது.
பொதுவாக, நமது சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து யூரிக் அமிலத்தை வடிகட்டுகின்றன.
 அப்படி வடிகட்டும்போது உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது,
​​அது மூட்டுகளில் குவியத் தொடங்குகிறது. உடலில் யூரிக் அமில அளவு அதிகரிப்பதால், மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம், எலும்புகளில் வலி, நடப்பதில் சிரமம் என பல பிரச்சினைகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன.
எனவே, உடலில் சுரக்கும் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமானது.



உடலில் யூரிக் அமிலம் அதிகரித்தால், மருத்துவரை அணுகி முறையான ஆலோசனை பெற வேண்டும். மருந்துகள் ஒருபுறம் அவற்றின் வேலையைச் செய்தாலும், மேலும் அதிக யூரிக் அமிலம் உருவாகாமல் இருக்க யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல, நோய் ஏற்பட்ட பிறகு சிகிச்சை எடுத்துக் கொள்வதைவிட, நோய் ஏற்படுவதற்கு முன்னரே முன்னெச்சரிக்கையாக இருக்கலாம். .

யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்துவதில் வைத்தியத்தில் வெந்தயமும் நல்ல வேலை செய்கிறது. தொடர்ந்து வெந்தயத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால், யூரிக் அமில பிரச்சனையில் இருந்து விடுபடலாம். எனவே யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த வெந்தய விதைகள் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் மற்றும் அதை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | அற்புத பலன் தரும் குளிர்காலக் கீரை! கடுகுக்கீரை கூட்டு சாப்பிட்டால் நோய்கள் ஓடிப்போகும்

யூரிக் அமிலத்தை குறைப்பதில் வெந்தய விதைகள் எப்படி பயன்படும்?
வெந்தய விதைகள் மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி, இரும்பு, கால்சியம், ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், மக்னீசியம், காப்பர் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் பருமனை கட்டுப்படுத்த உதவுகிறது.

யூரிக் அமிலம் உடலில் அதிகரிப்பதற்கு உடல் பருமன் முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட வெந்தயம், இது மூட்டுகளில் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. வெந்தய விதைகளை தொடர்ந்து உட்கொள்வது செரிமான அமைப்பையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

யூரிக் அமிலத்தை குறைக்க வெந்தய விதைகளை எப்படி உட்கொள்வது?
வெந்தய நீர்

அதிக யூரிக் அமில பிரச்சனையில் இருந்து விடுபட, வெந்தய விதை நீரை அருந்தலாம். இதற்கு, ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். இந்த தண்ணீரை காலையில் எடுத்துப் பார்த்தால் அதன் நிறம் மஞ்சளாக மாறியிருக்கும். அதாவது, வெந்தயத்தின் பண்புகள் தண்ணீரில் கலந்திருக்கும் வெந்தயத் தண்ணீர் லேசான கசப்பு சுவையுடன் இருக்கும். இந்த மூலிகை நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். வெந்தயத்தையும் நன்றாக மென்று சாப்பிடுங்கள். தினசரி ஒரு ஸ்பூன் வெந்தயத்தை பயன்படுத்தி வந்தால், அது யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும்.

மேலும் படிக்க | JN1 கொரோனா இல்லை என்றாலும், காய்ச்சல் இருந்தால் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்

வெந்தய கசாயம்
யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த, வெந்தயத்தை கசாயமாக தயாரித்துக் குடிக்கலாம்.  ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீரை சூடாக்கவும். அதில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு ஒரு கோப்பையில் வடிகட்டி குடிக்கவும். வெந்தய விதை டீயை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவும். தவிர, மூட்டு வலி மற்றும் வீக்கத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

முளைகட்டிய வெந்தய விதைகள்
உடலில் யூரிக் அமிலம் அதிகரித்திருந்தால், அதைக் கட்டுப்படுத்த முளைகட்டிய வெந்தயத்தை உண்ணலாம். வெந்தயத்தை நீரில் சில மணி நேரங்கள் ஊறவைத்து தண்ணீரை நன்றாக வடித்து எடுத்துக் கொள்ளவும். ஊறிய வெந்தயத்தை சுத்தமான பருத்தி துணியில் கட்டி 2 முதல் 3 நாட்கள் வரை வைத்திருக்கவும்.

பிறகு திறந்து பார்த்தால், வெந்தய விதைகள் முளை விட்டிருக்கும். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். யூரிக் ஆசிட் பிரச்சனையை தீர்க்க வெந்தயத்தை முளைக்கட்டி பயன்படுத்தவும்.

அதிக யூரிக் அமில பிரச்சனையை சமாளிக்க வெந்தயம் உட்கொள்வது நன்மை பயக்கும். இருப்பினும், யூரிக் அமில பிரச்சனை அதிகமாக இருந்தால், மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக