சனி, 11 நவம்பர், 2023

திமுகவை காப்பியடித்த பாஜக - மத்திய பிரதேச தேர்தல் வாக்குறுதி free education and breakfast scheme

tamil.oneindia.com - Nantha Kumar R : போபால்: மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தைலையொட்டி பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் திமுகவின் திட்டம் காப்பியடிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர சமையல் எரிவாயு ரூ.450க்கு வழங்கப்படும். பெண்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் என்பன உள்பட பல திட்டங்களை பாஜக அறிவித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். இந்நிலையில் வரும் 17 ம் தேதி ஒரே கட்டமாக மத்திய பிரதேச மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
Madhya Pradesh Election: BJP manifesto says Gas subsidy, free education and breakfast schemeமொத்தம் 230 தொகுதிகள் உள்ள நிலையில் ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க 116 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அங்கு காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடியாக போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வைக்க பாஜக போராடும் நிலையில், அரியணை ஏற காங்கிரஸ் துடித்து வருகிறது.

இதனால் தற்போது மத்திய பிரதேசத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ், பாஜகவின் மேலிட தலைவர்கள் மாநில தலைவர்களுடன் சேர்ந்து தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் சட்டசபை தேர்தலையொட்டி பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் மக்களுக்கான பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக VSகாங்கிரஸ்..மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?என்னங்க இப்படி இருக்கு?புது சர்வேபாஜக VSகாங்கிரஸ்..மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?என்னங்க இப்படி இருக்கு?புது சர்வே

அதன்படி மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது லட்லி பாக்னா மற்றும் பிஎம் உஜ்வாலா திட்டங்களின் கீழ் மக்களுக்கு ரூ.450க்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும். விவசாயிகள் நலன்கருதி அரசு சார்பில் கோதுமை குவிண்டாலுக்கு ரூ.2,700க்கு கொள்முதல் செய்யப்படும். நெல் குவிண்டாலுக்கு ரூ.3,100க்கு அரசு சார்பில் கொள்முதல் செய்யப்படும்.

மாநிலத்தில் உள்ள அனைத்து எஸ்டி பிளாக்குகளிலும் ஏகலைவா வித்யாலயாஸ் பள்ளி அமைக்கப்படும். அதோடு மருத்துவ கல்லூரிகளும் கட்டப்படும். ஏழை பெண் குழந்தைகளுக்கு முதுகலை பட்டப்படிப்பு வரை இலவச கல்வி அளிக்கப்படும். அதோடு ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு 12ம் வகுப்பு வரை இலவச கல்வி அளிக்கப்படும்.

மேலும், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும். அதோடு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவுடன் சத்தான காலை உணவும் வழங்கப்படும். இதுதவிர இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) போன்று மத்திய பிரதேச தொழில்நுட்பக் கழகம் மற்றும் ஏய்ம்ஸ் போன்று மத்தியப் பிரதேச மருத்துவ அறிவியல் நிறுவனம் நிறுவப்படும்.

ஷாக்கில் காங்.. நூலிழையில் மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்கும் பாஜக? பரபர கருத்து கணிப்புஷாக்கில் காங்.. நூலிழையில் மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்கும் பாஜக? பரபர கருத்து கணிப்பு

பழங்குடியின மக்களை மேம்படுத்தும் வகையில் ரூ.3 லட்சம் கோடிக்கு பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்படும். பிரதமர் மோடியின் வீடு வழங்கும் திட்டத்தை போல் முதல்வர் ஜன் ஆவாஸ் யோஜனா திட்டம் மூலம் வீடில்லா ஏழைகளுக்கு வீடு வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்பாட்டில் உள்ளது. 2021 சட்டசபை தேர்தலின்போது இந்த திட்டத்தை திமுக அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய பிரதேச மாநில அரசு பள்ளிகளிலும் மதிய உணவுடன் சேர்த்து மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என பாஜக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி மாநில பாஜக தலைவர் விடி சர்மா கூறுகையில், ‛‛மாநிலத்தில் உள்ள அனைத்து சமூக மக்களுக்கும் பயன்பெறும் வகையில் அவர்களிடம் ஆலோசனைகள் பெறப்பட்டது. மேலும் மக்களிடமும் ஆலோசனைகள் கேட்கப்பட்டது. மக்களும் ஆலோசனைகளை கடிதங்களாக வழங்கினர். அதனடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது பாஜகவுக்கு நிச்சயம் கைக்கொடுக்கும்'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக