செவ்வாய், 28 நவம்பர், 2023

உங்களுக்கு அடையாளம் தந்தவர்' அமீருக்கு இயக்குநர் பாரதிராஜா ஆதரவு!

minnambalam.com: 'உங்களுக்கு அடையாளம் தந்தவர்' அமீருக்கு இயக்குநர் பாரதிராஜா ஆதரவு!
மின்னம்பலம் - Manjula : ‘உங்களுக்கு அடையாளம் தந்தவர்’ அமீருக்கு இயக்குநர் பாரதிராஜா ஆதரவு!
பருத்திவீரன் பிரச்சினையை சுமூகமாக பேசி தீர்த்து கொள்ளுங்கள் என, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா அறிவுரை கூறியிருக்கிறார்.
கார்த்தியை வைத்து அமீர் இயக்கிய பருத்திவீரன் படம் வெளியாகி 16 ஆண்டுகள் கடந்து விட்டாலும் கூட, அந்த படம் படப்பிடிப்பின்போது நடந்த பிரச்சினைகள் இன்னும் தீராமல் கன்னித்தீவு போல நீண்டு கொண்டே செல்கின்றன. குறிப்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா-இயக்குநர் அமீர் இடையிலான பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
    — Bharathiraja (@offBharathiraja) November 28, 2023
இந்த பிரச்சினை மீண்டும் பெரிதாவதற்கு ஞானவேல் ராஜாவின் சமீபத்திய பேட்டிகளே முக்கிய காரணமாக உள்ளது. இதுவரை அமீருக்கு ஆதரவாக திரைத்துறையில் இருந்து சசிக்குமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன், சுதா கொங்கரா, சிநேகன், கரு.பழனியப்பன் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.

அந்த வரிசையில் தற்போது இயக்குனர் பாரதிராஜா இணைந்துள்ளார். இந்த பிரச்சினையை பேசி தீர்த்து கொள்ளும்படி அவர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார்.
-மஞ்சுளா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக