சனி, 25 நவம்பர், 2023

கும்பகோணம் - நண்பரை வெட்டிக் கொன்று.. உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட நாட்டு வைத்தியர்.

tamil.samayam.com  - பஹன்யா ராமமூர்த்தி  :  தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மணல்மேடு மகாராஜபுரத்தைச் சேர்ந்த அசோக்ராஜன் என்ற 27 வயது இளைஞர் சென்னையில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார்.
அசோக்ராஜனுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்த அசோக் ராஜன் கடந்த 13ஆம் தேதி சிதம்பரத்துக்குச் சென்று நண்பரைப் பார்த்துவிட்டு மீண்டும் சென்னைக்குச் செல்வதாகத் தன்னுடைய பாட்டி பத்மினியிடம் சொல்லிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பினார்.
ஆனால் அவர் சென்னைக்கு செல்லவில்லை. அவரது போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.


இதனை தொடர்ந்து அவரது பாட்டி பத்மினி அப்பகுதி போலீஸில் புகார் அளித்தார்.
இதுதொடர்பான வழக்கில் கும்பகோணம் சோழப்புரத்தை சேர்ந்த நாட்டு வைத்தியரான கேசவமூர்த்தியை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர் போலீசார்.
முதலில் எதுவும் தெரியாது என பசப்பிய கேசவமூர்த்தியிடம் தங்கள் பாணியில் விசாரித்தனர் போலீசார்.

அப்போது அவர் கூறிய தகவல்கள் அதிர வைத்தன. ஆண்மைக் குறைவுக்காக அசோக் தன்னிடம் சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவரை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்த போது அவர் மறுத்ததாகவும் தெரிவித்தார் நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தி. மேலும் தனது ஆசைக்கு இணங்க மறுத்த அசோக் ராஜனுக்கு ஆண்மை வீரியத்துக்கான மருந்தை அதிகமாக கொடுத்து அவரை தனது ஆசைக்கு பயன்படுத்தியுள்ளார் கேசவமூர்த்தி. இதனால் நிலைகுலைந்த அசோக்கை பிறப்பு உறுப்பை வெட்டி கொலை செய்துள்ளார் கேசவராஜ்.

பின்னர் அவருடைய உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டை சுற்றி புதைத்ததாக தெரிவித்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரது வீட்டை சுற்றி தேடுதல் வேட்டையை தொடங்கினர். இதில் ஏராளமான எலும்புக்கூடுகள் சிக்கின. இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் அசோக்கை துண்டு துண்டாக வெட்டி அவரது இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றை சமைத்து சாப்பிட்டதாகவும் மேலும் தான் வளர்க்கும் நாய்க்கும் அவற்றை பரிமாறியதாக தெரிவித்தார். இதனைக் கேட்ட போலீசார் உறைந்து போயினர்.

மேலும் தங்க சங்கிலியுடன் ஒரு எலும்புக்கூடு கிடைத்தது. அதுகுறித்த விசாரணையில் கடந்த ஆண்டு அனஸ் என்ற இஸ்லாமிய இளைஞரை வெட்டிக் கொலை செய்ததாகவும் தெரிவித்தார். இரண்டு பேரின் உடல்களையும் என்ன செய்வது என்று தெரியாமல் வெட்டி வீட்டிலேயே புதைத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது வீட்டை கட்டுப்பாட்டில் எடுத்துள்ள காவல்துறையினர் வீட்டை சுற்றிலும் புதைக்கப்பட்டுள்ள எலும்புகளை கைப்பற்றி வருகின்றனர்.

மேலும் அவரது வீட்டை மூன்றாக பிரித்த போலீசார், மூன்று உதவி காவல் ஆய்வாளர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து அவரது வீட்டை சுற்றிலும் தொடர்ந்து காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். வேறு யாரேனும் கேசவ மூர்த்தியால் கொல்லப்பட்டுள்ளார்களா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞரை கொலை செய்து அவரது உடல் உறுப்புகளை நாட்டு வைத்தியர் சமைத்து சாப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஹன்யா ராமமூர்த்தி கட்டுரையாளரை பற்றி
பஹன்யா ராமமூர்த்தி
சீனியர் டிஜிட்டல் கன்டென்ட் புரொடியூசர்
செய்தி சேனல், எஃப் எம் (RJ) மற்றும் டிஜிட்டல் ஊடத்துறையில் 13 ஆண்டுகள் அனுபவம். இதழியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளேன். பொது செய்திகள், அரசியல், க்ரைம், விளையாட்டு சினிமா மற்றும் உலக நடப்பு செய்திகளில் அனுபவம்.. தற்போது சமயம் தமிழில் சினிமா செய்திகளை அளித்து வருகிறேன்.Read 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக