செவ்வாய், 7 நவம்பர், 2023

அமெரிக்காவில் கேரளா கணவன் மனைவி மீது காரை ஏற்றி கத்தியால் குத்தி கொலை

Accused and his wife

  Oneindia  - Hemavandhana :  நியூயார்க்: கட்டின மனைவி மீது இந்த அளவுக்கு ஒரு நபருக்கு வன்மம் இருக்குமா? ஒரு மனிதன் இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா? என்று கிலியை கிளப்பிவிட்டுள்ளார் அதிசய கணவன். அமெரிக்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் புளோரிடாவில் வசித்து வருகிறார் பிலிப் மேத்யூ..
இவர் ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்..
இவரது மனைவி பெயர் மெரின் ஜாய்.. இவர்களுக்கு திருமணமாகி சில வருடங்களாகிறது..
 மனைவி ஜாய், ஒரு மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்த்து வருகிறார்.


தம்பதி: ஆனாலும், கல்யாணம் ஆனதில் தம்பதிக்குள் நிறைய கருத்து வேறுபாடு எழுந்தது..
அதனால், கடந்த 2020ம் ஆண்டில் இருந்தே தகராறு அடிக்கடி வந்துபோயுள்ளது..
 கணவரின் நடவடிக்கையால் நொந்து போனார் மெரின் ஜாய்.. ஒருகட்டத்தில் வெறுப்படைந்த அந்த 26 வயது பெண், கணவரை பிரிந்து வாழவும் முடிவு செய்தார்..

பொதுவாக, தம்பதிக்குள் ஒத்துவரவில்லை என்றால், பிரிந்து வாழ்வது என்பது அமெரிக்காவில் சகஜமான ஒன்று..
ஆனால், மனைவி தன்னைவிட்டு பிரிந்து வாழ்வதை கணவர் பிலிப் மேத்யூ ஏற்கவே இல்லை..
 கடுமையான கோபம் கொண்டார்..
மேலும் தன்னை விட்டு பிரிய ஆசைப்பட்ட மனைவியை சமாதானப்படுத்த முயன்றார்.
 சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல், தன்னுடைய மனம் புண்படாமலும் நடந்து கொண்டால், ஒன்றாக வாழ தனக்கு சம்மதம் என்று சொன்னார் அந்த பெண்..

உத்தரவாதம்: ஆனால், பிரச்சினையின்றி சேர்ந்து வாழ எந்த உத்தரவாதத்தையும் கணவர் தரவில்லை.. இதனால், சேர்ந்து வாழ்வது குறித்து உறுதியான பதிலையும், மனைவி சொல்லவில்லை.

இப்படிப்பட்ட சூழலில், ஒருநாள் வேலைக்கு கிளம்பி சென்ற மெரின் ஜாய், அன்றைய தினம் வீட்டுக்கு வரவில்லை..
நேரமாகியும் வீடு திரும்பாததால், ஒருவேளை தன்னைவிட்டு மனைவி பிரிந்து போய்விட்டாரோ? என்று கணவர் சந்தேகப்பட்டார்.
உடனே ஆத்திரத்துடன், மனைவி நர்சாக பணிபுரியும் மருத்துவமனைக்கு சென்றார்..
அப்போதுதான், டியூட்டியை முடித்துவிட்டு, மனைவி வெளியே வந்தார்..
 வீட்டிற்கு கிளம்பி செல்வதற்காக, பார்க்கிங் ஏரியாவில் உள்ள காரை எடுக்க போனார் மனைவி:

மனைவியை பார்க்கிங் ஏரியாவில் பார்த்ததுமே, கடும் ஆவேசம் அடைந்த கணவர்,
தான் ஓட்டிச்சென்ற காரிலேயே, மனைவி மீது வேகமாக மோதினார்..
இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த மனைவியை, கத்தியால் 17 முறை ஆவேசமாக குத்தினார்..
இதில், ரத்தம் கொட்டி, தரையிலேயே துடிதுடித்தார் மனைவி.. ஆனால், 17 முறை கத்தியால் குத்தியும் உயிர் போகாததால், தரையிலேயே மனைவியை கிடத்தி, வேகமாக அவரது உடல் மீது காரை ஏற்றினார்..

 முன்னும் பின்னுமாக, மனைவி உடல் மீது காரை ஏற்றி ஏற்றி இறக்கினார்..
 ஒருகட்டத்தில் மனைவியின் உடல் நசுங்கியதை பார்த்ததுமே, அங்கிருந்து அதே காரில் ஏறி பறந்துவிட்டார்.

ஆனால், அப்போதும் மனைவியின் உடல் குத்துயிரும் கொலையுயிருமாக துடித்தது..
கார் பார்க்கிங்கில் இருந்தவர்கள் எல்லாம் பதறியடித்து கொண்டு வந்தனர்..
இறுதி நிமிடத்தில், தன்னை தாக்கி கத்தியால் குத்தியது, கணவன்தான் என்று மரண வாக்குமூலம் தந்தார்.. பிறகு, அடுத்த செகண்டே உயிரும் பிரிந்துவிட்டது.

: இவ்வளவு நிகழ்வும், கார் பார்க்கிங் ஏரியாவில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அத்துடன், கொலை சம்பவத்தை நேரடியாக பார்த்தவர்களே சாட்சியானார்கள்..
போதாக்குறைக்கு, மனைவியின் மரண வாக்குமூலமும் பெருத்த ஆதாரமாக அமைந்துவிட்டது..
இறுதியில் வழக்கை விசாரித்த புளோரிடா கோர்ட், அந்த கொலைகார கணவனுக்கு மரண தண்டனை கொடுக்க முடிவு செய்தது.
ஆனால், அங்கேயும் விதிவிளையாடியது.. அதிர்ச்சி: மனைவியுடன் ஒருகாலத்தில், நெருக்கமாகவும், அந்நியோன்யமாகவும், பாசமாகவும் வாழ்ந்த தருணங்களை எல்லாம் ஆதாரங்களாக கோர்ட்டில் முன்வைத்தார் குற்றவாளியின் வழக்கறிஞர்..

இவைகளை பரிசீலித்த நீதிமன்றத்தில், மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக தற்போது குறைத்துள்ளது.. மனைவியை ஒரு ஸ்பீட் பிரேக்கர் போல நினைத்து, பலமுறை காரை முன்னும் பின்னும் ஏற்றி இறக்கி கொன்ற கணவனை, நினைத்து அதிர்ந்து போயுள்ளது அமெரிக்கா..!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக