சனி, 18 நவம்பர், 2023

மகனின் சொத்தில் தாய்க்கு பங்கு இல்லை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

 மின்னம்பலம் -christopher :  தாய்க்கு சொத்தில் பங்கு இல்லை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
”திருமணமான மகன் உயிரிழந்துவிட்டால், அவரது சொத்தில் தாய்க்கு பங்கில்லை” என சென்னை உயர் நீதிமன்றம் இன்று (நவம்பர் 18) உத்தரவிட்டுள்ளது.
நாகப்பட்டினத்தை சேர்ந்த மோசஸ் என்பவர் திருமணமான நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
அவரது தாயார் பவுலின் இருதய மேரி தனது மகனின் சொத்தில் பங்கு கேட்டு நாகை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில், மகனின் சொத்தில் தாய்க்கு பங்கு உள்ளது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து மோசஸின் மனைவி அக்னஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை நீதிமன்றம், “இந்திய வாரிசுரிமை சட்டப்படி மகனின் சொத்தில் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்குத் தான் பங்கு உள்ளது.

திருமணமான மகன் சொத்தில் தாய் உரிமை கோர முடியாது.  எனவே தாய்க்கு மகனது சொத்தில் பங்கு உண்டு என்ற நாகை மாவட்ட நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது” என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக