திங்கள், 27 நவம்பர், 2023

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் தாக்கப்பட்டார்

tamil.oneindia.com - Vishnupriya R :  யூடியூபர்கள் வன்முறையை தூண்டுகிறார்கள்! இதுக்கெல்லாமா தாக்குவாங்க? வனிதாவுக்கு குரல் கொடுத்த காயத்ரி
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் தாக்கப்பட்ட சம்பவத்தில் போலீஸார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை காயத்ரி ரகுராம் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அசைக்க முடியாத போட்டியாளராக இருந்தவர் பிரதீப் ஆண்டனி. இவர் நிறைய கெட்ட வார்த்தைகளை பேசினாலும் அவருக்கு ரசிகர்கள் ஏராளம். ஏனென்றால் அவர் நியாயமாக நடந்து கொண்டார் என்பது ரசிகர்களின் கருத்தாக இருந்தது.
அவர் எதிர்க்கும் விஷயங்களில் எல்லாம் நிச்சயம் ஒரு நியாயம் இருக்கும் என நம்புகிறார்கள். இவர் நிச்சயம் இறுதி போட்டி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சக போட்டியாளர்களால் குற்றம்சாட்டப்பட்டு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

இதற்கு கமல்ஹாசனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தீர விசாரிக்காமல் ஒரு டஃப் கன்டெஸ்டென்டுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. ரெட் கார்டு விவகாரத்திற்கு விசித்ரா, அர்ச்சனா, தினேஷ், கூல் சுரேஷ் உள்ளிட்டோரே எதிர்த்தனர். இந்த நிலையில் வனிதா விஜயகுமார் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து ரிவ்யூ கொடுத்து வருகிறார்.

அவர் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்தது சரியே என்பதை போல் விமர்சித்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் கமல்ஹாசன் கலந்து கொண்ட பிக்பாஸ் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு விட்டு வெளியே வந்துள்ளார் வனிதா. அப்போது யாரோ ஒருவர் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்குறதுக்கு ஆதரிக்கிறியா என கேட்டவாறே முகத்தில் குத்தியுள்ளார்.

என்னவென புரியாமல் தவித்த வனிதாவின் முகம் வீங்கிவிட்டது. ரத்தம் வழிந்தது. உடனடியாக தகவலறிந்த காவல் துறையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் முதலுதவி செய்து அனுப்பி வைத்தனர். விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் இப்படி வன்முறையை தூண்டுவதா என பலர் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில் ஜோவிகா வெற்றி பெற வனிதா ஸ்டன்ட் அடிக்கிறார் என நெட்டிசன்கள் பலர் விமர்சித்து வருகிறார்கள். இதற்கு வனிதா கோபத்துடன் பதிலடி கொடுத்துள்ளார். எனக்கு இப்படி ஒரு தாக்குதல் நடந்திருப்பது என் மகளுக்கு தெரிந்தால் ஓடோடி வந்துவிடுவாள் என வனிதா தெரிவித்துள்ளார்.

என்னாது Publicity stuntஆ? என் மீதான தாக்குதல் மட்டும் ஜோவிகாவுக்கு தெரிஞ்சதுனா!.. கொந்தளித்த வனிதா என்னாது Publicity stuntஆ? என் மீதான தாக்குதல் மட்டும் ஜோவிகாவுக்கு தெரிஞ்சதுனா!.. கொந்தளித்த வனிதா

இந்த நிலையில் வனிதா தாக்குதலுக்கு நடிகை காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் அல்லது எந்த ஒரு பிரபலத்திற்காகவும், இந்த நிகழ்ச்சியை மிகவும் தீவிரமாகவும் எடுத்துக்கொண்டு வன்முறையில் ஈடுபடுபவர்களுக்காகவும் ரசிகர்கள் பெயரால் இதை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். வன்முறையைத் தூண்டும் பல யூடியூபர்கள் உள்ளனர். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.

போலீஸார் இதை தீவிரமாக எடுத்துக்கொண்டு நிபந்தனையின்றி தண்டிப்பார்கள் என நம்புவதாகவும் ஒவ்வொரு நபரின் பாதுகாப்பும் முக்கியம் என்றும் காயத்ரி ரகுராம் தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக