திங்கள், 6 நவம்பர், 2023

கர்நாடக அதிகாரி பிரதிமா கொலை- பணி நீக்கத்தின் எதிரொலி

கொலையில் முடிந்த பணி நீக்கம் : சுங்கத்துறை பெண் அதிகாரி வழக்கில் அதிர்ச்சி திருப்பம்- கர்நாடகாவில் பகீர்!

கலைஞர் செய்திகில் -Lenin : இந்தியா  கர்நாடகாவில் பெண் அதிகாரி கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதிமா. இவர் பெங்களூருவில் சுரங்கம் மற்றும் நில ஆய்வியல் துறையின் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பணியை முடித்து விட்டு அரசு வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். பிறகு இவரது அண்ணன் பிரதீஷ், தங்கைக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் அழைப்பை எடுக்கவில்லை.


இதனால் அடுத்தநாள் காலை தங்கையின் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது அவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
கொலையில் முடிந்த பணி நீக்கம் : சுங்கத்துறை பெண் அதிகாரி வழக்கில் அதிர்ச்சி திருப்பம்- கர்நாடகாவில் பகீர்!

பிறகு அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். அரசு அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனே போலிஸார் குற்றவாளியைப் பிடிக்கத் தீவிரமாகச் செயல்பட்டனர். நேர்மையான அதிகாரியான இவர், முறைகேடுகளுடன் செயல்பட்ட சுரங்கங்களுக்கு சீல்வைத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அவரை கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலிஸார் விசாரணை நடத்தினர்.

அப்போதுதான் பிரதிமாவிடம் ஓட்டுநராக கிரண் என்பவர் பணியாற்றி வந்ததும், இவர்களுக்கு இடையே தகராறு இருந்து வந்ததும் தெரிந்தது. பிறகு போலிஸார் கிரணைப் பிடித்து விசாரித்தபோதுதான், பணி நீக்கம் செய்த காரணத்தினால் பிரதிமாவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக